திருவிழா காலத்தில் வலம் வரும் முறை
திருவிழா காலத்தில் சுவாமி வீதியில் பவனி வரும் போது, மூலவரின் எல்லா சக்தியையும் தன்னுடன் எடுத்துச் செல்வதாக ஐதீகம். அந்த சமயத்தில் கோயிலுக்குள் மூலவருக்கு அர்ச்சனை செய்தல், வலம் வருதல் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என்கிறது 'சிவயோகி ஸம்வாதம்' என்ற நூலிலுள்ள ஸ்லோகம். ஏனெனில், கோயிலுக்குள் மூலவரும், உற்சவரும் ( பவன் வரும் சுவாமி ) ஒன்றாக இருக்கும் சமயத்தில் மட்டுமே வலம் வர வேண்டும் என்பது மரபு. இந்த நடைமுறை கொடிமரம், உற்சவர் அமைந்துள்ள கோயில்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மூன்று தடவை தீர்த்தம் வாங்குங்க !
பெருமாள் கோயிலில் தரிசனம் முடிந்ததும், துளசி தீர்த்தம் வழங்குவது வழக்கம். அதை ஒருமுறை வாங்கியே பருகுகிறோம். ஆனால், தீர்த்தத்தை பயபக்தியுடன், இருகைகளாலும் மூன்று முறை தனித்தனியாகப் பெற்று, தனித்தனியாகவே பருக வேண்டும் என்று ஸம்ருதி ஸ்லோகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று ம்முறை தீர்த்தம் பருக்கினால்தான், உடல், உள்ளம், வாக்கு ஆகிய மூன்றாலும்செய்த காயிகம், மாதஸம், வாசிகம் என்னும் மூன்று வித பாவங்களும் நீங்கும். பெருமாளின் தீர்த்தம் மட்டுமல்லாமல், கலசம் வைத்து பூஜிக்கப்பட்டு தரும் தீர்த்ததிற்கும் இது பொருந்தும்.
-- குட்டிச்செய்திகள்.
-- தினமலர் ஆன்மிக மலர். சென்னை பதிப்பு . ஜூன் 24, 2014.
No comments:
Post a Comment