Tuesday, September 8, 2009

துளசி தீர்த்தம் .

பெருமாள் கோவில்களில் துளசி இலைகளை பிரசாதமாக கொடுப்பார்கள் . இதை , சனிக்கிழமை , ஏகாதசி நாட்கள் , திருவோண நட்சத்திரம் வரும் நாட்களில் பெறுவது மிகவும் நல்லதாகும் .
இப்படிப்பட்ட துளசியை எப்போதெல்லாம் செடியில் இருந்து பறிக்கக் கூடாது என்பதற்கும் விதிமுறைகள் உள்ளன .
பவுர்ணமி , ஞாயிற்றுக்கிழமை , சங்கராந்தி தினம் , நடுப்பகல் , இரவு , சூரியோதயத்திற்கு பிறகு மற்றும் எண்ணெய் தேய்த்த உடம்புடனும் , குளிக்காமலும் துளசி இலையை பறிக்கக்கூடாது .
--- தினத்தந்தி , 30 - 12 - 2008 .

Monday, September 7, 2009

கவுதம புத்தர் .

ஒரு சமயம் கவுதம புத்தர் , தனது சீடகளிடம் , மனித வாழ்க்கை எத்தனை காலம் ? என்று கேட்டார் . அதற்கு சீடர்கள் , 50 வருடம் , 60 வருடம் என்று ஆளுக்கு ஒவ்வொன்றாக கூறினார்கள் .
அதற்கு புத்தர் பதில் அளிக்கையில் , " நீங்கள் கூறும் பதில்கள் அனைத்துமே தவறு . உண்மையான மனித வாழ்க்கை மூச்சு இருக்கும் வரையே ! " என்றார் .
---தினத்தந்தி , 07 - 04 - 2009 .

Sunday, September 6, 2009

ஆனந்தநடனம் .

நடராஜர் ஆனந்தநடனம் புரியும் திருச் சபைகள் ஐந்து என்கிறார்கள் . அவை:
சிதம்பரம் ---------- பொன்னம்பலம் .
மதுரை --------------- வெள்ளியம்பலம் .
திருநெல்வேலி -- தாமிரச்சபை .
குற்றாலம் ---------- சித்திரசபை .
திருவாலங்காடு -- ரத்தினசபை .
--- தினத்தந்தி , 06 - 01 - 2009 .

Saturday, September 5, 2009

பதிவிரதைகள் .

சூரியனின் மனைவி --------- ------சுவர்ச்சலா .
இந்திரன் மனைவி ----------- -------சசிகலா .
வசிஷ்டரின் மனைவி ------------ அருந்ததி .
சந்திரனின் மனைவி ------- --------ரோகிணி .
அகத்தியரின் மனைவி ------------- லோப முத்திரை .
சியவண ரிஷியின் மனைவி -- சுகன்யா .
சத்தியவானின் மனைவி --------- சாவித்திரி .
நளனின் மனைவி --------------------- தமயந்தி .
ராமனின் மனைவி -------------------- சீதாதேவி .
--- தினத்தந்தி , 20 - 01 - 2009 .

Friday, September 4, 2009

தர்ப்பைப்புல் .

தர்ப்பைப்புல் , புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது . இதற்கு , ' அக்னி கர்பம் ' என்ற பெயரும் உண்டு . இந்த புல்லில் காரமும் , புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்கிறார்கள் . அப்படி செய்தால் , அவற்றின் ஓசை திறன் குறையாமல் இருக்கும் .
தர்ப்பைப்புல் தண்ணீர் இல்லாவிட்டாலும் வாடாது . நீருக்குள் பல நாட்கள் கிடந்தாலும் அழுகாது . சூரிய கிரகணம் ஏற்படும் போது இதன் வீரியம் அதிகமாக இருக்கும் . இதன் காற்றுபடும் இடங்களில் தொற்றுநோய்கள் வராது .
---தினத்தந்தி , 27 - 01 - 2009 .

Thursday, September 3, 2009

வெற்றிலை .

வெற்றிலையின் பின்பக்கம் உள்ள நரம்புகள் நடுநரம்பின் ஒரு புள்ளியிலிருந்து இடம் வலமாகப் பிரிந்து சென்றால் , அது பெண் வெற்றிலை .
நடுநரம்பின் வெவ்வேறு பிள்ளிகளிலிருந்து கிளை நரம்புகள் இடது பக்கமாகவோ , வலது பக்கமாகவோ பிரிந்து சென்றால் அது ஆண் வெற்றிலை .
--- மஞ்சை வசந்தன் . பாக்யா . மே 1 -- 7 ; 2009 .

Wednesday, September 2, 2009

எதையும் தாங்கும் இதயம் .

" எதையும் தாங்கும் இதயம் வேண்டும் " என்றக் கருத்தை முதன் முதலில் அண்ணா சொன்னதாக பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர் . அவ்வாறு சிலர் கூறவும் எழுதவும் செய்கின்றனர் . ஆனால் , இது சரியன்று . உண்மையில் இச்சொற்றொடரைக் கூறியவர் பகுத்தறிவுச் சிந்தனையாளரான லார்ட் பைரன் என்பவர் ஆவார் . இவர் பிரிட்டிஷ் அரசால் இங்கிலாந்திலிருந்து பிரான்சிற்கு நாடு கடத்தப்பட்டார் . புறப்படுவதற்கு முன் , " டோவர் " துறைமுகத்திலிருந்து படகில் சென்றபோது , இக்கருத்தைக் கூறுகிறார் .
" என்னை நேசிப்பார்க்கு ஒரு
பெருமூச்சு
என்னை வெறுப்பார்க்கு ஒரு புன் முறுவல்
என்ன வந்தாலும் சரியே
எதையும் தாங்கும் இதயம் உண்டு ".
-- என்று கூறிவிட்டு பிரான்சுக்கு விடைபெற்றார் . இச்சொற்றொடரை அண்ணா எடுத்து ஆண்டார் என்பதே சரியாகும் .
இதேபோல் ,
நாடு என்ன செய்தது
என்று கேட்காதே !
நீ நாட்டுக்கு என்ன
செய்தாய் ?
-- என்ற சொற்றொடர் கென்னடியால் சொல்லப்பட்டது என்று பலரும் சொல்கின்றனர் . ஆனால் , அது உண்மையல்ல .
இதைச் சொன்னவர் கவிஞர் கலீல் ஜிப்ரான் ஆவார் . " புரோக்கன் விங் " " தி பிராபட் " போன்ற புகழ்மிக்க நூல்களை எழுதியவர் இவர் . அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கென்னடி இதை எடுத்தாண்டார் என்பதே உண்மை !