Thursday, April 23, 2009

ராமானுஜர்

" ராமானுஜர் சுமார் 120 ஆண்டுகள் உயிர் வாழ்ந்துள்ளார் . ஆனால் , இதைப் பலரும் சந்தேகக்கண்கொண்டுதான் பார்க்கிறார்கள் . ராமானுஜரைத் துன்புறுத்திய மன்னன் குலோத்துங்க சோழனா என்ற சந்தேகமும் உள்ளது . எனவே , இதைப் பற்றிய தெளிவை ஏற்படுத்தத் தேடுதலில் இறங்கினேன் . ராமானுஜர் குறித்த பல்வேறு பழைய நூல்களைத் திரட்டினேன் . அதில் ஒன்று பிள்ளை லோகஞ்சீயர் எழுதிய ' ராமானுஜார்ய திவ்ய காதை '. அந்தப் புத்தகத்தில் பிங்கல ஆண்டு , கலியுக 4118 , சித்திரை மாதம் , சுக்லபட்சம் , பஞ்சமி , குருவாரம் , திருவாதிரை நட்சத்திரத்தில் ராமானுஜர் பிறந்ததாக வருகிறது . ராமானுஜருக்கு அடுத்து வந்த மணவாள முனிவரின் சிஷ்யர் வழி வந்தவர் எழுதிய நூல் இது . இதை வைத்து ஆங்கிலத் தேதியைக் கணக்கிட்டேன் . அதன்படி ராமானுஜர் பிறந்தது 1017 -ம் வருடம் , ஏப்ரல் மாதம் 13 -ம் தேதி ஆகும் .ராமானுஜர் 1077 -ம் ஆண்டு பிறந்ததாகச் சிலர் சொல்கிறார்கள் . ஆனால் , பிள்ளைலோகஞ்சீயர் சொல்லும் வரையறைகள் , இந்த ஆண்டுக்குப் பொருந்தவில்லை .எனவே , இதுதான் சரியானது . பக்த எல்லைக்குள் ஆய்வுத்தன்மைகள் வர வேண்டியது வரவேற்க வேண்டியதுதானே !
-- சென்னை ஐ. ஐ. டி. இயற்பியல் பேராசிரியர் ரங்கராஜன் . ஆனந்தவிகடன் . 14 -01 - 2009 .

No comments: