இரண்டு ஓநாய்கள் !
சான்ஃபிரான்சிஸ்கோ முதல் சென்னை வரை படர்ந்து விரிந்திருக்கும் பிசினஸ் சாம்ராஜ்யத்தின் பிதாமகர் அவர் . விடுமுறைக்குத் தன் இரு பேத்திகளுடன் அடர்ந்த காட்டுக்குள் ' ச்ஃபாரி ரைட் ' மேற்கொண்டார் .ஓரிடத்தில் ஓநாய்கள் கூட்டமாகச் செல்வதைக் கண்டவர் , வண்டியை நிறுத்தச் சொன்னார் . " எனக்குள் எந்நேரமும் இரு ஓநாய்கள் மூர்க்கமாய்ச் சண்டையிட்டப்படியே இருக்கிறது .அது மிக ஆக்ரோஷமான போர் . அகங்காரம் , ஆக்ரோஷம் , பயம் , கோபம் , பேராசை போன்ற குணங்கள் நிரம்பியது ஒரு ஓநாய் . மற்றொன்றோ தைரியம் , தன்னம்பிக்கை , மனிதாபிமானம் ,காதல்
ஆகியவற்றால் நிரம்பியது . இதுபோன்ற இரண்டு ஓநாய்கள் அனைவரின் மனதிலும் ரெளத்ர யுத்தம் நடத்திக்கொண்டே இருக்கும் .
தங்கள் தாத்தா சொல்வதைக் கவனமாகக் கோட்டுக்கொண்டு இருந்த பேத்திகள் , " எந்த ஓநாய் தாத்தா ஜெயிக்கும் ?" என்று ஆர்வமாகக் கேட்டனர் .
" நீங்கள் எந்த ஒநாய்க்கு உணவிடுகிறீர்களோ , அது !"
முன்னிழுக்கும் முனைப்பு ( ஃபார்வர்ட் ஃபோகஸ் ), பின்னிழுக்கும் பிறழ்வு ( பேக்வர்ட் ஃபோகஸ் ) ஆகியவற்றுக்குத்தான் அந்த இரு ஓநாய்ளை உருவகப்படுத்துகிறார்கள் .நமது எண்ண ஓட்டங்களில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ , அவைதான் செயல்களாக வெளிப்படுகின்றன என்பதற்கு இந்த குட்டிக் கதையை உதாரணமாகச் சொல்கிறார்கள் கெவின் மற்றும் ஜாக்கி . இந்தியாவின் டாடா நிறுவன சி.இ.ஒ.வில் துவங்கி , ஸோனி நிறுவன உயரதிகாரிகள் வரை , இவர்களின் ' பூம் ' புத்தகத்துக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்கள் .
--எனக்குள் இரண்டு ஓநாய்கள் ! கட்டுரையில் , கி. கார்த்திகேயன் . ஆனந்தவிகடன் . (10-12-2008 ) .
No comments:
Post a Comment