ஐந்து கடமைகள் !
கலிமா எனப்படும் மூல மந்திரம் , தொழுகை , நோன்பு , ஜகாத் , ஹஜ் ஆகியவை முஸ்லிம்களின் ஐந்து கடமைகள் .
' வணக்கத்திற்குரியவன் அல்லா ( ஹ் ) . முகம்மது , அல்லா (ஹ் ) வின் இறுதித் தூதர் ' என்பதை மனத்தில் உறுதிகொண்டு நாவினால் மொழிவது முதல் கடமையான கலிமா ஆகும் .
தினமும் ஐந்து நேரம் தொழுவது இரண்டாவது கடமை .
ரமலான் மாதம் முழுவதும் உபவாசம் இருப்பது மூன்றாவது கடமையான நோன்பு ஆகும் .
செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை ( இரண்டரை சத விகிதம் ) ஆண்டுதோறும் ஏழைகளுக்குத் திருக்குர் ஆனில் விதிக்கப்பட்டுள்ளபடி விநியோகிப்பது ' ஜகாத் ' எனும் நான்காவது கடமை .
வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் வாழ்நாளில் ஒரு முறை மக்காவுக்குச் சென்று ஹஜ் யாத்திரையை நிறைவேற்றுவது ஐந்தாவது கடமை .
--நீதிபதி மு . மு . இஸ்மாயீல். ஆனந்தவிகடன் . 12-12-2008 .
ஒட்டகக் கறி !
" ஒட்டகக் கறி சாப்பிடுங்கள் . நான் இன்று சாப்பிட்டேன் , மிகவும் சுவை . ஆம் , ஆஸ்திரேலியாவைக் காப்பாற்ற அதுதான் ஒரேவழி ! " என்று டி . வி - யில் தோன்றிச் சொல்கிறார் அந்த ஆஸ்திரேலிய அதிகாரி . அந்நாட்டில் எகிடுதகிடாக எகிறி விட்ட ஒட்டகங்கள் அதிகளவு மீத்தேன் வாயுவை வெளியிடுவதோடு , ஏகப்பட்ட தண்ணீரைக் காலிசெய்து ஈகோ பேலன்ஸைக் கெடுக்கின்றனவாம் . அதனால்தான் ஒட்டகக் கறி திட்டம் !
--- ஆனந்தவிகடன் . 24 - 12 - 2008 .
தனிமை .
கர்ப்பத்தில் பத்துமாத தனிமை
பூப்பெய்தியபோது பதினாறு நாள் தனிமை
வாலிபம் வரை கனவுகளோடு தனிமை
தூங்கும்போதோ உறக்கத்தில் தனிமை
விதவை என்ன தவறு செய்தாள் ?
வாழ்நாள் முழுவதும் தனிமை !
No comments:
Post a Comment