Thursday, April 9, 2009

துணிச்சல் - தைரியம் !

" ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் துணிச்சல் , தைரியம் அதிகம் என்று சொல்கிறார்கள் , அது நூற்றுக்கு நூறு உண்மை . காரணம் , ' பதின் வயதுகளில் இருந்தே அவர்கள் ரத்தத்தை ( மென்சஸ் ) பார்த்தே வளர்வதால் ! ' என்கிறது ஓர் உளவியல் ஆய்வு ! ".
ரசனைக்குறிய வாசகம் ஒன்று !
" ஒரு சுவர் வாசகம் . இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்டு இருந்தது . ' வேலை கொடுங்கடா , எங்களுக்கு வேலை கொடுங்கடா , இல்லையென்றால் ஆள விடுங்கடா , நாட்டை ஆளவிடுங்கடா...! "
--நானே கேள்வி...நானே பதில். ஆனந்தவிகடன் .30-07-2008 .
பெட்ரோல் !
ஓரு லிட்டர் பெட்ரோலை வண்டியில் நிரப்பிக்கொண்டு பத்து ரூபாய் நோட்டை நீட்டினால் பங்க் ஊழியர் என்ன சொல்வார் ?
பொறுமைசாலி என்றால் ' நூறு ரூபாய் நோட்டுன்னு தப்பா நினைச்சுட்டீங்களா ? ' என்றபடி நோட்டைத் திருப்பிக் கொடுப்பார் . இல்லையென்றால் , ' என்ன சார் கிண்டல் பண்றீங்களா ? ' என்று கடுகடுக்கலாம் .
ஆனால் இரண்டுமே இல்லாமல் அமைதியாக அந்தப் பத்து ரூபாயை வாங்கிக்கொண்டு ' இந்தாங்க பாக்கி ' என்று எட்டு ரூபாயை உங்களிடம் நீட்டினால் ?
ஆம் , வெனிசுவேலா நாட்டில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 2-12 ரூபாய்தான் . ஒரு சாக்லெட்டைவிட ஒரு லிட்டர் பெட்ரோல் விலை கம்மி !
ஏன் கொடுக்க மாட்டார்கள் ? அந்த நாடு நிலத்தால் ஆனதா அல்லது பெட்ரோலால் ஆனதா என்று சந்தேகம் வருமளவுக்கு வெனிசுவேலாவின் நிலத்தடியில் நிரம்பிக்கிடக்கிறது பெட்ரோல் .
--ஜி.எஸ்.எஸ். பெட்ரோலின் கதை. ஆனந்தவிகடன் . 30-07-2008 .
தவளை !
தவளை தேவை இல்லாமல் சத்தம் போடுவது பற்றி நாம் அவஸ்த்தைப்படுகிறோம் அது பெண் தவளையைப் புணர்வதற்காகக் கூப்பிடுகிறது .
--ஹாய் மதன் . 30-07-2008 .

No comments: