அறிவியல் ரீதியான பஞ்சாங்கம் .
தமிழகத்தில் மற்றும் பாரதத்தில் வழங்கும் கிரகக் கணக்கீட்டு மற்றும் பஞ்சாங்க முறைதான் அமெரிக்கன் எபிமெரிசுக்கு அடிப்படையாக அமைகிறது . விஞ்ஞானிகள் அந்தக் கணக்கீட்டின் அடிப்படையில்தான் , விண்வெளிக் கலங்களை ஆகாயத்தில் செலுத்துகிறார்கள் . இப்படி அறிவியலாரும் , அடிப்படையாகக் கொள்ளும் உயர்வு படைத்ததுதான் இந்திய வானியல் ஆகும் .
பஞ்சாங்கங்களில் போடப்பட்டுள்ள ஆண்டுக் கணக்கு முறைதான் , வானியல் அடிப்படையில் அமைந்தது . சூரியனின் இயக்கத்தின் அடிப்படையில் அமையும் காலப் பகுப்பு , ஒரு மாதம் . சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் தங்கியிருக்கிறான் . அவன் எந்த ராசியில் தங்கியிருக்கிறானோ அந்த அடிப்படையில் மாதத்தின் பெயர் அமைகிறது . சூரியன் மேஷ ராசியில் தங்கியிருக்கும் காலம் மேஷ மாதம் . இது போலவே மற்ற ராசிகளிலும் தங்கியிருக்கும் மாதத்தை அந்த ராசியின் பெயரால் சொல்வார்கள் .
சூரியன் ஒரு ராசியில் தங்கியிருக்கும் நேரத்தில் , சந்திரன் ஒருமுறை 12 ராசிகளையும் வலம் வந்து விடுகிறான் . தாந்திரமான அடிப்படையில் சந்திரன் பவுர்ணமி நாளில் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறானோ அதன் அடிப்படையில் அந்த மாதத்தின் பெயர் இருக்கும் . சித்திரை மாதத்தில் சித்திரா நட்சத்திரமும் , பவுர்ணமியும் சேர்ந்து வரும் . சித்ரா பவுர்ணமி மிகவும் விசேஷமான நாள் . அந்த அடிப்படையில் அந்த மாதம் சித்திரை மாதம் எனப்படுகிறது . இதுபோலத்தான் பிற மாதங்களின் பெயர்களும் சந்திரனின் இயக்கத்தின் அடிப்படையில் அமைகின்றன .
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் சந்திர , சூரிய இயக்கத்தின் அடிப்படையில் விஞ்ஞான ரீதியாக அமைந்தவை .
வழிபாட்டு நிலையங்களில் நடைபெறும் திருவிழாக்களில் கடற்கரை ஓரம் உள்ள திருவிழாக்கள் , திதிகளின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன . நதிக்கரை ஓரம் உள்ள ஊர்களின் திருவிழாக்கள் நட்சத்திர அடிப்படையில் அமைகின்றன .
வீடுகளில் கடைபிடிக்கும் விழாக்கள் , விரதங்கள் , பண்டிகைகள் எல்லாமும் பஞ்சாங்க அடிப்படையிலேயே அமையக்கூடியவை . ராம நவமி , கோகுலாஷ்டமி , விநாயகர் சதுர்த்தி , கந்த சஷ்டி , வைகாசி விசாகம் , கிருத்திகை , திருவோணம் என எல்லாமே இந்த அடிப்படையில் அமைபவைதான் .
வீடுகளில் பிறந்த நாளை நட்சத்திர அடிப்படையில் கொண்டாடுகிறோம் . முன்னோர் வழிபாட்டில் திதிக்கு முக்கியத்துவம் தருகிறோம் .
இப்படி எல்லா வகையிலும் பின்னிப் பிணைந்திருக்கும் தமிழ் மாதங்களில் , சித்திரை இன்று 14 -ம் தேதி பிறக்கிறது . சித்திரை முதல் நாளை இறையுணர்வுடன் எதிர் கொண்டு நன்மைகள் செய்து பலன் அடைவோமாக .
--- புலவர் . வே . மகாதேவன் . தினமலர் . ஏப்ரல் 12 , 2009 .
No comments:
Post a Comment