பிறவா யாக்கை பெரியோன் கோயில்
பிற மதத்தினர் , இந்துக்களைப் பார்த்து " உங்கள் மதத்தில் இத்தனை தெய்வங்களா ? எங்கள் மதத்தில் ஒரே ஒரு தெய்வம்தான் " என்று சொல்லும்போது , நம் மதத்தின் கோட்பாடுகளை நன்கு அறியாத பலர் , இது குறித்து வெட்கப்படுகிறார்கள் . " நமக்கு ஏன் இத்தனை தெய்வங்கள் ? " என்று வேதனைப்படுகிறார்கள் .
ஆதியிலும் சரி , இன்றும் சரி , பிரம்மம்தான் இருந்தது , இருக்கிறது . இந்த பிரம்மம் உருவமெடுக்கத் தொடங்கிய நிலையில் சிவம் என அழைக்கப்பட்டது .
அது அருவமாக இருந்தது . அதாவது அதற்கு உருவம் என்று எதுவும் கிடையாது . அது பிருதிவியில் புகுந்ததும் , அதற்குப் படைக்கும் தெய்வமான பிரம்மா என்று பெயர் வந்தது . தண்ணீரில் புகுந்ததும் காக்கும் கடவுளான விஷ்ணு என்று பெயர் பெற்றது . அக்னியில் புகுந்ததும் அழிக்கும் கடவுளான ருத்திரன் என்று பெயர் பெற்றது . வாயுவில் புகுந்து மகேஸ்வரனாக மாறிற்று . ஆகாசத்தில் புகுந்து அனுக்கிரகம் செய்யும் சதாசிவனாக மாறிற்று .
இருந்தும் அருவமான சிவத்தை வணங்கியவர்கள் அதற்கு உருவம் இருந்தால் தியானம் பண்ண எளிதாக இருக்குமே என்று நினைத்தார்கள் . அதற்காக சிவம் சிவலிங்கமாக மாறிற்று . ஆனால் பகவானுக்கும் நம்மைப்போல கண் , காது , கை இருந்தால்தானே அவர் நம்மைப் பார்த்து , நம் குறைகளைக் கேட்டு , கைகளினால் வாரிக் கொடுப்பார் என்று நினைத்தார்கள் . அதனால் சிவம் பரமசிவனாகவும் , பராசக்தியாகவும் காட்சியளித்தார் .
--பெரம்பூர் ஸ்ரீ காஞ்சி காமகோடி சேவா சமிதியில் , சிதம்பரம் சுவாமிநாதன் . ஜூன் 21 . 1990 .
No comments:
Post a Comment