Monday, April 27, 2009

உறுதிமொழிகள் ! செல்லாது !

'டாப் 10 ' உறுதிமொழிகள் !
1 . தீவிரவாதத்தை அழிக்கும் ' தீ 'யாக நான் திகழ்வேன் .
2 . புதைப்போம் தீவிரவாதத்தை ! விதைப்போம் தேசப்பற்றை ! காப்போம் தேசத்தை !
3 . தாயைப் பழித்தவனை விடேன் ; எம் தேசத்தை பங்கப்படுத்துபவனை விடேன்...விடேன் ...
4 . தேசத்தாயின் கருவறையில் தான் பிறந்தேன் . தீவிரவாதத்தை வேரறுக்க உறுதியேற்பேன் .
5 . நேசம் வளர்ப்போம் , நாசம் தவிர்ப்போம் , தேசம் காப்போம் .
6 . சுவாசிக்காமல் கூட இருப்பேன் ; என் தாய் நாட்டை நேசிக்காமல் இருக்கமாட்டேன் .
7 . தீவிரவாத முள் மரத்தை என் கைகளால் வெட்டி வேரறுப்பேன் .
8 . மதத்தின் பெயரால் , மனதால் விலங்காய் மாற மாட்டேன் .
9 . எனது தாயையும் , எனது நாட்டையும் தெய்வமாக போற்றுவேன் .
10. வேரறுப்போம் தீவிரவாதத்தை ; விதைப்போம் சகோதரத்துவத்தை ... தி.ம. சிறு. மல .ஜன . 16 . 2009 .
இது செல்லாது !
குற்றவாளிகளிடம் இருந்து உண்மையை வரவழைக்க , ' உண்மை கண்டறியும் சோதனை ' என்ற பெயரில் குற்றவாளியை மருந்து மூலம் மயக்கம் அடையச் செய்து மயங்கிய நிலையில் கேள்விகளை திரும்ப , திரும்ப கேட்டு தகவல்களை பதிவு செய்கிற முறை இந்தியாவில் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது . இதை ' நார்நாட்டிக் அனாலிசிஸ் ' என்று கூறுவர் . தென்னிந்தியாவில் இப்போது பெங்களூரில் இந்த மையம் உள்ளது . சென்னையில் மையம் துவக்கப்பட உள்ளது . இந்த உண்மை கண்டறியும் சோதனை பயனற்றது , நம்பகத்தன்மை அற்றது எனக்கூறி அமெரிக்கா 30 ஆண்டுகளுக்கு முன்பே இதை தடை செய்துவிட்டது . இந்த முறை இந்திய அரசியல் அமைப்பின் 20 (3) ல் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது என்பதால் செல்லாது என ஐகோர்ட் கூறியுள்ளது . மேலும் , இந்திய தண்டனைச் சட்டம் 126 பிரிவு 2-ல் குற்றவாளி பதில் கூறாமல் மவுனம் காக்கும் உரிமையை வழங்கியுள்ளது .
எவ்வித நிர்பந்தமும் இல்லாமல் சுயநினைவுடன் எழுதும் உயில்தான் செல்லும் என்பது சட்டம் . அப்படியிருக்க சுயநினைவு தவறிய நிலையில் கூறுவது எப்படி செல்லுபடியாகும் . மேலும் , உலகின் எந்த அறிவியல் அமைப்பும் ' நார்நாட்டிக் அனாலிசிஸ் ' முறையின் நம்பகத்தன்மையை ஏற்றுக்கொள்ளவே இல்லை . நம் நாட்டின் தடயவியல் விஞ்ஞானி சந்திரசேகரனும் இதையே கூறியுள்ளார் . எனவே , உதவாத , மனிதௌரிமைக்கு எதிரான , அடிப்படை உரிமைக்கு மாறான இந்த முறையை கைவிட வேண்டும் .
--ஆர். டி. மூர்த்தி , திருவையாறு . தி.ம. 13 - 01 - 2009 .

No comments: