தினசரி ராகு காலங்களை மனனம் செய்ய ஒரு எளிய வழி .
ராகுகாலத்தில் எந்த ஒரு காரியத்தையும் தொடங்கக்கூடாது என்பார்கள் . அத்தகைய ராகுகாலம் தினசரி எந்த நேரத்தில் வருகிறது என்பது பலருக்கும் தெரியாது . அப்படிப்பட்ட நேரத்தை மனதில் பதித்துக்கொள்ள ஒரு எளிய வழி இது :
' திருவாரூர் சந்தையிலே வெற்றிலை புஷ்பம் விற்ற செட்டியாரும் ஞானியரே ! '
திருவாரூர் -- திங்கள் -- காலை 7.30 முதல் 9.00 மணி வரை .
சந்தையிலே -- சனி -- காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை .
வெற்றிலை -- வெள்ளி -- காலை 10.30 மணி முதல் 12 .மணி வரை .
புஷ்பம் -- புதன் -- மதியம் 12 மணி முதல் 1. 30 மணி வரை .
விற்ற -- வியாழன் -- மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை .
செட்டியாரும் -- செவ்வாய் -- மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை .
ஞானியரே -- ஞாயிறு -- மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை .
--- காமேஸ்வரன் , சென்னை. தினமலர் ,மே 6 , 2010 .
2 comments:
திங்கள் சந்தையில் வெளியில் புறப்பட்டு விளையாட சென்ற ஞாயிறு என்றும் உண்டு
அன்பு ராம்ஜி யாஹூ ! தயவு கூர்ந்து எனது Older Posts களைப் பாருங்கள் . அதில் நீங்கள் குறிப்பிட்டப்படி குறிப்பிட்டுள்ளேன் .
Post a Comment