Wednesday, August 10, 2011
உங்க ஸ்டைல் என்ன ?
ஸ்டைல் என்பது என்ன ? நம் உடல்மொழி மூலமாக ஏதோ ஒன்றை வித்தியாசமாகச் செய்வதுதான் இல்லையா ? இந்த வகையில் பார்த்தால் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையான ஸ்டைல் இருக்கிறது என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த டெஸ்மாண்ட் மோரிஸ், 1977 ல் இவர் எழுதிய ' மேன்வாட்ச்சிங் ' என்ற புத்தகத்தில் . மார்புக்குக் குறுக்கே கை கட்டிக்கொண்டு பேசுவார்கள் . இதைத் ' தன்னடக்கம் ' என்று மட்டுமே சொல்ல முடியாதாம் . ஆனால், கைகட்டுவதை மேனரிசமாகக்கொள்ளாத ஒருவர் அப்படிச் செய்தால், எதிராளியின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றோ, தன்னைப்பற்றிய பயம் அதிகமாகிவிட்டது என்றோ அர்த்தமாம் . கண்ணுக்கு நேராகப் பார்த்துப் பேசுவது கம்பீரம் மட்டுமல்ல, எதிராளியை நம்பவில்லை என்பதையும் குறிக்குமாம் . நீங்கள் பேசும்போது எதிராளி இடுப்பில் கைவைத்து நிற்கிறாரா ? அவருக்குப் பொறுமையே இல்லை . சீக்கிரம் பேச்சை முடித்துக்கொள்ளுங்கள் . எதிராளி கையைப் பின்னால் கட்டிக்கொள்கிறாரா ? அவர் ஏதோ ஒரு விஷயத்தைச் செய்ய முடியாமல் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கிறார் . ஒன்று, அது உங்கள் மேலுள்ள பயமாக இருக்கலாம், அல்லது நீங்கள் பேசுவது பிடிக்காமல் உங்கள் மூக்கில் குத்தவும் யோசித்துக்கொண்டு இருக்கலாம் . ஒன்றுமே பேசாமல் கீழ் உதட்டை மேல் பற்களால் கடிக்கிறாரா ? அப்படியெனில், அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . எதிராளி ஏதாவது செய்த பிறகு அதைப் பொறுத்துதான் அவரது செய்கைகள் இருக்கும். பாக்கெட்டில் கைவிட்டபடியே பேசுகிறாரா ? ஒன்று அவருக்கு போர் அடிக்கிறது அல்லது நடுக்கத்தை மறைக்கிறார், அல்லது உங்களிடம் பொய் சொல்லுகிறார் . ' மனிதர்களும் புத்தகங்கள்போலத்தான், வாசிக்க ஆரம்பித்தால் மூடி வைக்கத் தோணாது ' என்கிறார் டெஸ்மாண்ட் மோரிஸ் . --- கார்த்திகா ,ஸ்டைல் விகடன் இணைப்பு . 10 . 2. 2010 .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment