Tuesday, August 30, 2011

உயிர் துற... உண்மை திற !

தான் இறக்கப்பொகிறோம் என்ற நம்பிக்கையை முழுதாகக் குற்றவாளிக்குத் தருவதன் மூலம் அவனிடம் இருந்து உண்மைகளைக் கறக்கும் இந்த முறையை ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்புகள் பயன்படுத்துகின்றன . இதற்காகப் பயன்படுத்தப்படும் ஆளுயர நீர்த் தொட்டிகள்தான் இந்த ' சென்ஸரி டெப்ரிவேஷன் ' தொட்டிகள் . இவற்றில் குற்றவாளியை நிர்வாணமாக உள்ளே தள்ளி மூடிவிடுவார்கள் . தண்ணீர் திறந்துவிடப்பட்டு முழுக்க நீர் நிரப்பப்படும் . நீர்மட்டம் உயர உயர, நீரில் மூழ்கி தான் இறக்கப் போகிறோம் என்ற பயம் குற்றவாளிக்கு ஏற்படும் . அப்போது குற்றவாளியிடம் கேட்கும் கேள்விக்குத் தானாகவே பதில் வந்துவிடும் . அதையும் மீறி முரண்டு பிடித்தால், முழுக்க நீரால் சூழப்படுவார்கள் . அப்புறம் என்ன மரணம்தான் என்கிறீர்களா ? அதுதான் இல்லை . இந்த நீரில் கலந்திருக்கும் பெர்ஃப்ளூரோ கார்பன் என்ற வேதிப்பொருளை நம் நுரையீரல் சுவாசிக்கும் . ஆனால், நம் மூளையோ, ' நீரில் மூழ்கினால் மரணம் ' என்றுதான் சொல்லும் . அதோடு கேட்கும் திறன், தொடுதிறன், பார்க்கும் மற்றும் நுகரும் திறன் அனைத்தும் தற்காலிகமாக மறைந்துவிடும் .இந்த நீரில் இருக்கும் எப்சம் உப்பு, நம் உடலை இறந்த உடல் போலவே மிதக்கவைக்கும் . இதனால் குற்றவாளியின் மனம் தான் இறந்துவிட்டதாகவே நினைக்கும் . பத்து நிமிடங்கள் கழித்து தொட்டியைத் திறக்கும்போது, தான் உயிரோடு இருக்கிறோமா, இல்லையா என்பதே குற்றவாளிக்குத் தெரியாது . கிட்டத்தட்ட அல்ல... நிச்சயமாகவே இது ஒரு மறுபிறவி விசாரணைதான் ! --- தீபக் , ஜென்மம் விகடன் இணைப்பு . 14 . 4 . 10 .

No comments: