Friday, August 19, 2011
உலகின் முதல் தங்கக் கோயில் .
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நம் பாரத தேசத்தில் திகழ்ந்த முதல் பொற்கோயில் எது தெரியுமா ? தஞ்சைப் பெரிய கோயில்தான் ! ஆமாம் . 216 அடி உயரத்தில் நீண்டு நெடிதுயர்ந்து காணப்படும் விமானம் முழுவதையும் தங்கத்தாலேயே வேய்ந்து அழகு பார்த்தான் ராஜராஜசோழன் . இப்போது தங்கக் கோபுரம் எங்கே ? பிற்காலப் படையெடுப்புகளால் அத்தனையும் சூரையாடப்பட்டுவிட்டது . சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலை எப்படி தங்க நிறத்தில் ஜொலிக்கிறதோ அது போலவே பெரிய கோயிலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, 216 அடி உயரத்துக்கும் தங்கக் கூரை அமைத்தான் . இப்போது காணப்படும் தஞ்சைப் பெரிய கோபுரம் முழுக்க முழுக்கத் தங்கமயமாக தகதகத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . அப்படித்தான் இருந்தது ராஜராஜன் காலத்தில் . இந்தக் கோயிலைப் பார்த்துவிட்டுத்தான் சிதம்பரம் ஆலயத்திற்குப் பொற்கூரை அமைத்தான் இரண்டாம் குலோத்துங்கன் . ---ப்ரியா கல்யாணராமன் . குமுதம் , 20 . 10 . 2010 .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment