Friday, August 12, 2011
' ஃப்ரனெமி '
* ஒருவரது இமேஜை டேமேஜ் செய்வது பெரும்பாலும் அவர்களது நண்பர்களாகவே இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சி நம்பர் ஒன் ! இப்படிப்பட்ட நண்பர்களை ? ! ) ' ஃப்ரனெமி 'என்கிறார்கள் ( frenemy -- ஃப்ரெண்ட் பாதி, எனிமி மீதி ). * நீர் வாழ் உயிரினங்களில் மனிதனின் ஒரே சிறந்த நண்பன் டால்ஃபின்தான் . திசை மாறிய படகுகளுக்கு வழிகாட்டுவது, நீரில் மூழ்கிய மனிதர்களை முதுகில் ஏற்றிக் கரை சேர்ப்பது, திமிங்கிலம், சுரா போன்ற ஆபத்தான உயிரினங்கள் வந்தால் மனிதர்களுக்கு சிக்னல் கொடுப்பது என்று டால்ஃபின்கள் கடல் பயணத்தில் மனிதர்களுக்கு எவ்வளவோ நல்லது செய்கின்றன * மனிதர்கள் தனக்கு வில்லன்தான் என்பதைப் புரிந்துகொள்ளும் புத்திசாலிகள்தான் டால்ப்ஃபின்கள் . ஆனாலும், அவை நட்புக்கு மரியாதை செய்கின்றன . * ஒருவர் மீது ஒருவருக்கு இனக் கவர்ச்சியோ, உடல் கவர்ச்சியோ இல்லாமல் அன்பு, பாசம், நட்பு, மரியாதை கூடிக்கொண்டே இருந்தால் அதுதான் ' பிளேட்டானிக் லவ் ' பிளேட்டானிக் லவ், காமமும் காதலும் இல்லாத அதற்கு இணையான நட்பு என்று சொல்லலாம் . கிரேக்க மேதை சாக்ரட்டீஸுக்கும், அவரது மாணவர் அல்ஸபையடீஸுக்கும் அப்படி ஓர் ஈர்ப்பு . இருவரும் ஒரே அலைவரிசையில் யோசித்தார்கள் . அந்தக் காலகட்டத்தில் அவர்களை ஓரினச் சேர்க்கையாளர்களாகப் பார்த்தார்கள் . ' இது அப்படி இல்லை, இது காதலைவிடப் பூனிதமானது ! ' என்று சாக்ரட்டீஸின் இன்னொரு மாணவர் மக்களுக்கு விளக்கினார் . அன்று முதல் இது ' பிளேட்டானிக் லவ் ' என்று அழைக்கப்படுகிறது . * எட்மன்ட் ஹிலாரி -- டென்சிங் நார்கே : எவரெஸ்ட் சிகரத்தை முதல்முதலில் தங்கள் காலடியில் வைத்தவர்கள் . ஹிலாரியின் உதவியாளர்தான் டென்சிங் . சிகரம் தொட உதவியதற்குக் கைம்மாறாக எவரெஸ்ட் உச்சியில் டென்சிங்கை போட்டோ எடுத்தார் ஹிலாரி . தான் எடுத்துக் கொள்ளவில்லை .அந்தப் பெருமைக்காகவே ' யார் முதலில் எவரெஸ்ட் உச்சியை அடைந்தது ? ' என்ற ரகசியத்தை இறுதிவரை சொல்லவே இல்லை டென்சிங் ! --- நட்பு விகடன் இணைப்பு , 3 . 2. 10 .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment