Tuesday, August 16, 2011
பால் புட்டியில் கேன்சர் .
பால் புட்டியில் கேன்சர் அபாயம் .. இலினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் பால் புட்டிகளில் புராஸ்ட்ரேட் புற்றுநோயை தோற்றுவிக்கும் ஆபத்தான சங்கதி இருக்கிறது என்கின்றனர் . பொதுவாக நாம் இப்போது உபயோகப்படுத்தி வரும் பிளாஸ்டிக்கை உருவாக்க ' பிஸ்பினால் ஏ ' என்ற ரசாயனம் கலக்கப்படுகிறது . இந்த பிஸ்பினால்தான் புராஸ்ட்ரேட் கேன்சரை உருவாக்கும் தன்மை கொண்டிருக்கிறது . பிஸ்பினாலை எலிகளுக்கு கொடுத்து ஆராய்ச்சி செய்ததில் இது உறுதியாகி இருக்கிறது . இந்த வேதியியல் பொருள் உடலுக்குள் புற்று நோய்க்கான திசுக்களை மெல்ல உருவாக்கி விடுகிறது . நாளடைவில் இது புராஸ்ட்ரேட் கேன்சராக உருமாற்றம் பெறுகிறது . குழந்தைகளுக்கு பிஸ்பினால் கலந்து உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் பால் புகட்டும்போது இந்த வேதியல் பொருள் அவர்களுக்குள்ளும் சென்று இந்த பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது . புட்டிகளில் மட்டுமல்லாது, குழந்தைகளுக்கு என்று நாம் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் கிண்ணங்கள், கத்திகள் போன்றவற்றிலும் பிஸ்பினால் ஆபத்து ஒளிந்திருக்கிறதாம் . இந்த பிஸ்பினால் மார்பக புற்று நோய், மாரடைப்பு, மலட்டுத்தன்மை போன்றவைகளுக்கு காரணகர்த்தாவாக இருக்கிறது . கடைசியாக ஒரு எச்சரிக்கை... ஆண்களை குறி வைத்து தாக்கி மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக இருப்பது இந்த புராஸ்ட்ரேட் கேன்சர்தான் . ---தினமலர் , அக்டோபர் 17 , 2010 .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment