Friday, August 26, 2011
ஏ.டி.எம் கார்டு பாதுகாப்பானதா ?
' உணவகம், சூப்பர் மார்க்கெட் போன்ற வணிக நிறுவனங்களில் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்த நீங்கள் கொடுக்கும் கார்டை electronic data capture இயந்திரத்தில் ஸ்வைப் செய்வார்கள் . அப்போது கார்டில் உள்ள தகவல்கள் அந்த இயந்திரம் மூலமாக வங்கிக்குச் சென்று பரிவர்த்தனையைத் தொடங்கலாமா என்பதை முடிவு செய்யும் . அந்த இயந்திரம் போலவே கார்டில் உள்ள தகவல்களைப் பிரதியெடுக்கும் இன்னொரு இயந்திரம் இருக்கிறது . அதை skimmerனு சொல்வாங்க . கார்டை ஸ்வைப் செய்யக் கொடுத்துட்டு நீங்க அதைக் கவனிக்காமல் இருக்கும் சந்தர்ப்பத்தில், மறைவிடத்தில் இருக்கும் ஸ்கிம்மர் இயந்திரத்தில் ஒரு முறை உங்கள் கார்டைத் தோய்த்துவிட்டால், தேவையான தகவல்களை அந்த இயந்திரம் பிரதி எடுத்துவைத்துக்கொள்ளும் . ஒரே ஒரு ஸ்கிம்மர் இயந்திரத்தில் 100 கார்டுகளின் தகவல்களைப் பதிந்துகொள்ள முடியும் . பிறகு, அந்தக் தகவல்களைவைத்து டம்மி கார்டு தயாரிப்பார்கள் . சம்பந்தப்பட்ட வங்கியில் தங்களின் கைகூலியாக வேலை செய்யும் நபர் மூலம், கார்டு உரிமையாளர் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்கிறார்கள் . அந்த டூப்ளிகேட் கார்டு மூலம் ஏ.டி. எம்.ல் பணம் எடுக்க முடியாது . ஆனால், ஆன்லைன் வர்த்தகம் மூலம் விமான, டிரெய்ன் டிக்கெட் பதிவது, ஷாப்பிங் விண்டோ மூலம் பொருட்கள் வாங்குவது போன்ற காரியங்களை மேற்கொள்ளலாம் .வங்கியில் உள்ள இவர்களின் பார்ட்னர் மூலம் ' ஒன்டைம் பாஸ்வேர்டு ' பெற்று பரிவர்த்தனைகளை முடித்துவிடுவார்கள் . மாதாந்திர வங்கி ஸ்டேட்மென்ட் மூலமாகவோ அல்லது அக்கவுன்டில் பணம் குறைவதை உணரும்போதோதான் இந்த மோசடியை கார்டின் நிஜ உரிமையாளர் உணர்ந்துகொள்ள முடியும் . ஆக, நீங்கள் உங்கள் கிரெடிட் / டெபிட் கார்டை மற்றொரு நபரிடம் கொடுக்கும்போது மிகவும் உஷாராக இருங்கள் ! " என்கிறார் சென்னை மாநகர போலீஸ் சைபர் கிரைம் கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் . ---பா. பிரவின்குமார் . ஆனந்த விகடன் 20 . 10 . 10 .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment