காசி, முத்தித் தலங்களில் முக்கியமான தலம். இங்கே இல்லாததே இல்லை. புண்ணிய நதி, விசுவநாதர், விசாலாட்சி, பைரவர்கள் என எல்லாம் இருக்கும் தலம் காசி.
காசியில் 6 பைரவரும், 108 விநாயகரும் இருப்பதாகப் புராணக்குறிப்புகள் உண்டு.
இந்து சமயத்தில் காசிக்கு முதன்மை தரப்பட்டிருக்கிறது. அதனால்தான், தெற்கே தென்காசி உருவாயிற்று. ஆங்காங்கே காசி விசுவநாதருக்குக் கோயில்கள் கட்டப்பட்டன. வடக்கேயும் காசி உண்டு. இமாச்சல உத்தரகாண்டில் ஹரித்துவாருக்கு மேலே உள்ளது உத்தர காசி.
எல்லாரும் காசியில் வசிப்பது என்பது சாத்தியமற்றது. அந்தப்பேறு சிலருக்கே வாய்க்கும். காசியில் இறக்க வேண்டும் என்று அந்திம காலத்தில் காசியில் வாழ்பவர்களும் உண்டு.
-- தினமலர். பக்திமலர். நவம்பர் 14, 2013.

No comments:
Post a Comment