செக்ஸ் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?
செக்ஸ் என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் இரண்டு விதமான பொருள்கள் உண்டு. மனிதர்கள் உள்ளடக்கிய உயிரிங்களில் ஆணா, பெண்ணா என்பது போன்று பிரித்து வகைப்படுத்தும் பொருளில் ' பால், பாலினம் ' ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம்.
( எ.கா ) கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்துகொள்ளும் சோதனையைச் செய்வது சட்டத்துக்குப் புறம்பானது./ திருநங்கைகள் தங்களை மூன்றாம் பாலாக எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று போராடிவருகின்றனர்.
இரண்டாவது பொருள், மனிதர்கள் காம உணர்வின் காரணமாக உடல்ரீதியாக உறவுகொள்வதைக் குறிக்கும். இந்தப் பொருளூக்கு ' உடலுறவு ' என்று சொல்லைப் பயன்படுத்தலாம்.
' புணர்ச்சி ' என்ற சொல்லுக்கும் இதே பொருள் இருந்தாலும், அந்தச் சொல் இந்தப் பொருளில் தற்போது அருகிக்கொண்டுவருகிறது.
செக்ஸுவல் ஃபீலிங் ( sexual feeling ), செக்ஸுவல் டிசையர் ( sexual desire ) ஆகிய சொற்களுக்கு ' பாலுணர்வு, பாலுறவு உந்துதல் ' ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம். ' காமம், காம உணர்வு ' என்ற சொற்களும் இதே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன.
-- சாத்தனார். கருத்துப் பேழை.
-- ' தி இந்து ' நாளிதழ். வெள்ளி, நவம்பர் 15, 2013.

No comments:
Post a Comment