Friday, February 7, 2014

அகண்ட முகம் !?

   அகண்ட முகங்களிடம் ' அலர்ட்' டா இருங்க!
     மனிதர்களின் முக அமைப்பு, மச்சங்கள், விரல்களின் நீள அகலங்கள் போன்றவைகளை மையமாகக் கொண்டு,  அவர்களுடைய குணாதிசயங்களை பட்டியலிடும் ஆய்வுகள் உலகமெங்கும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.  அந்த வகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு, அகண்ட முகம் கொண்ட ஆண்கள் அதிகம் பொய் பேசுவார்கள் என அதிர வைக்கிறது.
     லண்டனில் நடைபெற்ற இந்த ஆய்வில்  150க்கும் அதிகமான ஆண்கள் கலந்துகொண்டனர்.  அவர்களிடம் ஆன்லைனில்,  தாயம் ( டைஸ் ) உருட்டச் சொல்லி அறிவுறுத்தப்பட்டது.  அதில் கிடைக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் லாட்டரி டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  அதிகளவில் டிக்கெட் வாங்க ஆசைப்பட்டு,  கலந்துகோண்ட ஆண்களில் 5ல் ஒருவர் பொய் சொன்னது கண்டுபிடிக்கப்பட்டது.  இப்படி பொய் சொன்னவர்களில் பெரும் பாலானோர் அகண்ட முகம் கொண்டவர்கள்.
    ' நீண்ட முகத்தை காட்டிலும் அகண்ட முகம் கொண்டவர்கள் அதிகம் பொய் பேசுபவர்கள், மற்றவர்களை ஏமாற்றுபவர்கள் என்பது எங்களின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.  இதை அடிப்படையாகக் கொண்டு மோசடி பேர்வழிகளை பார்த்தவுடனே அடையளம் கண்டு கொள்ளலாம் ' என்கிறார் இந்த ஆய்வை நடத்திய செரில்மெக்காமிக்.
--  சண்டே ஸ்பெஷல் தினமலர்.. 10-11-2013. 

No comments: