காபிக் கொட்டைகளில் மிகச் சிறந்தது எது என்று தெரிந்தால், காபி சாப்பிடுவதையே நாம் விட்டுவிடுவோம். ஆம். பிராணிகள், பறவைகள் காபிப் பழத்தை உண்டு, மலம் கழிக்கும்போது வெளியேறும் கொட்டைகளையே ருசியில் சிறந்தவை என்று தரம்பிரிக்கிறார்கள். குரங்குகள், எலிகள் உண்பதை
'குரங்கு வஸ்து,' ' எலி வஸ்து 'என்று வகை பிரிப்பார்கள். இதிலேயே மிக உயர்வானது ' புனுகுப்பூனை வஸ்து ' தான்.
புனுகுப்பூனைகளை காபித் தோட்டத்தில் குடியானவர்கள் வளர்க்கிறார்கள். அவை வேண்டாம் என்றால்கூட, காபிப் பழத்தையே தொடர்ந்து தின்னக் கொடுக்கிறார்கள். சுகாதாரமற்ற கூண்டுகளில், நகரக்கூட இடமின்றி அடைத்துவைக்கப்படும் புனுகுப்பூனைகளும் - காபிப் பழத்தைத் தவிர, வேறெதுவும் சாப்பிடக் கிடைக்காது என்ற நிலையில் - அதைத் தின்கின்றன. பிறகு, குடியானவர் அவை கழிக்கும் ' புனுகுப்பூனை வஸ்து ' வைப் பத்திரப்படுத்தி, தினமும் விற்பனைக்குத் தந்து பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த காபிதான் இப்போது உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்படுகிறதாம். இந்தக் கொடுமையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ' பெடா ' என அழைக்கப்படும் பிராணிகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.
-- சி.ஹரி. கருத்துப் பேழை.
-- ' தி இந்து ' நாளிதழ். வெள்ளி, நவம்பர் 15, 2013.

No comments:
Post a Comment