Saturday, February 1, 2014

வந்தாச்சு...

 ( சிறப்பு }
வந்தாச்சு ஆன்லைன் பேப்பர்   'ஆப்' பேஸ்புக் நிறுவனம் அறிமுகம்.
     வாஷிங்டன்
     ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களுக்காக ஆன்லைன் செய்தித்தாளுக்கான அப்ளிகேஷனை ( ஆப்ஸ் ) ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.  இந்த நிறுவனம் வெளியிடும் முதல் தாயாரிப்பு இதுவாகும்.
     ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் விதத்தில் ஆன்லைன் செய்தித்தாளுக்கான 'ஆப்' - ஐ  ஃபேஸ்புக் வெளியிடுள்ளது.
     உறுத்தாத லே-அவுட் முறையில் மிகவும் அழகானதாக இந்த அப்ளிகேஷன் இருக்கும்.  மேலும், வாடிக்கையாளர்கள் தங்களின் சொந்த செய்தியையும் இதில் இணைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
     ஐ-போன் வாடிக்கையாளர்கள் வரும் 3-ம் தேதி முதல் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த முடியும்.  பல்வேறு விதமான செய்திகளிலிருந்து, வாடிக்கையாளர் தமக்குத் தேவையான குறிப்பிட்ட ரக செய்திகளை மட்டுமே பின் தொடரும் வசதி இதில் உள்ளது.  உணவு, விளையாட்டு, அறிவியல் என பல்வேறு தலைப்புகளில் செய்திகளைப் படிக்கலாம்.
    பிரசித்தி பெற்ற பல்வேறு வெளியீட்டாலர்களின் செய்தி கட்டுரைகளையும் இதில் காண முடியும்.
    இதில் எந்தெந்த நிறுவனங்கள் கூட்டாளியாக இருக்கும் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.  ஆயினும், இது தொடர்பான வீடியோ விளம்பரத்தில் நியூயார்க் டைம்ஸ், டைம், யுஎஸ்ஏ டுடே, ஹபிங்டன் போஸ்ட் உள்ளிட்ட செய்தித்தால்களின் செய்திகள் வாசிக்கப்படுவது காண்பிக்கப்படுகிறது.
    ஃபேஸ்புக் சமூக இணைய தளத்தின் நியூஸ்பீட் பகுதியிலிருந்தும் தகவல்கள் பெறப்படுகின்றன.  இத்தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வலைப்பூவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
-- பி.டி.ஐ.
-- 'தி இந்து' நாளிதழ், சனி,பிப்ரவரி 1,2014. 

No comments: