பழ வியாபாரி ஒருவர் கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களை வைத்திருந்தார். முதலில் பழம் வாங்க வந்தவர், கூடையில் இருந்த ஆரஞ்சுப் பழங்களில் சரி பாதியும், அரை அரஞ்சுப் பழத்தையும் வாங்கிச் சென்றார்.
அடுத்து வந்தவர் மீதியிருந்த பழங்களில் சரி பாதியும், அரைப் பழத்தையும் வாங்கிச் சென்றார்.
கடைசியாக வந்தவர் கூடையில் மீதியிருந்த ஆரஞ்சுப் பழங்களில் சரி பாதியும், அரைப் பழமும் வாங்கிச்சென்றார். கூடை காலியாகிவிட்டது. பழம் வாங்கியவர்களுக்கு வியாபாரி எந்தப் பழத்தையும் பாதியாக அறுத்துத் தரவில்லை.
இப்போது சொல்லுங்கள். பழ வியாபாரி தன் கூடையில் மொத்தம் எத்தனைப் பழங்கள் வைத்திருந்தார்?
விடை : 7 ஆரஞ்சுப் பழங்கள். ஏழில் சரிபாதி மூன்றரை. அதோடு பாதிப் பழத்தைச் சேர்த்தால் 4 பழங்கள். இதை எதற்காக வெட்ட வேண்டும்?
முதலில் வந்தவர் வாங்கிச் சென்றது 4. மீதி 3 . அடுத்து வந்தவர் மூன்றில் சரிபாதியும் ( ஒன்றரை ) பாதிப் பழம் ( அரை ) சேர்த்து 2 பழங்கள் வாங்கினார். இதையும் வெட்ட வேண்டாம் அல்லவா?
மீதி ஒன்று. அதில் சரி பாதி அரை, அதோடு அரை பழம் என்றால் ஒன்று. மீதி பூஜ்ஜியம்.
-- மாயாபஜார். குழந்தைகளின் குதூகல உலகம். சிறப்புப் பகுதி.
-- ' தி இந்து ' . புதன், அக்டோபர் 16,2013.

No comments:
Post a Comment