நாட்டில் பத்ம விருது படும்பாடு. எங்க மச்சானுக்கு ஒரு விருது தாங்க !
நாட்டின் உயர்ந்த விருதுகளாக கருதப்படும் பத்ம விருதுகள் வி ஐபிகளின் உறவினர்களுக்கு அதிகமாக வழம்கப்பட்டுள்ளது அம்பலமாகி இருக்கிறது. வி ஐ பி.களின் பரிந்துரைகளின் பேரிலே இந்த விருதுகளை அவர்கள் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.
பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்றவை நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதுகளாக கருதப்படுகின்றன. இந்த விருதுகள் ஆண்டு தோறும் குடியரசுத்தினத்துக்கு ஒரு நாள் முன்னதாக ஜனவரி 25ம் தேதி அறிவிக்கப்படும். ஜனாதிபதி மாளிகையில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடக்கும் விழாவில் ஜனாதிபதி வழங்குவார். இந்த விருதுகளுக்கு தேர்வு செய்யப்படும் நடைமுறையில் வி ஐ பிகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட விருதுகளில் யார்யாருக்கு எந்தெந்த வி ஐ பிகள் பரிந்துரை செய்தார்கள் என்ற தகவலை தருமாறு தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் எஸ்.சி.அகர்வால் மனு செய்திருந்தார். இந்த மனுவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில் சில ஆச்சரியமான விஷயங்கள் இடம் பெற்றுள்ளது.
பிரபல நடிகையும், ராஜ்யசபா எம்.பியுமான ஜெயப்பிரதாவுக்கு சமாஜ்வாடியின் முன்னாள் பொதுச்செயலாளர் அமர்சிங் பரிந்த்ரை செய்திருந்தார். பரபல பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் தன்னுடைய சகோதரி உஷாவுக்கும், பிரபல் இசைக்கலைஞர் உஸ்டட் அம்ஜத் அலிகான் தன்னுடைய மகன்கள் அமான், அயான் ஆகியோருக்கும் பரிந்துரை செய்திருந்தனர். காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா, காங்கிரஸ் எம்.பி.சுப்பராம ரெட்டி, இந்துஸ்தானி இசைக் கலைஞர் பண்டிட் ஜேஸ்ராஜ் ஆகியோரும் தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிந்துரை செய்த தகவலும் வெளியாகி உள்ளது. இந்த விருதுக்காக 1,300 பரிந்துரைகள் வந்ததாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-- சண்டே ஸ்பெஷல் தினமலர்.. 10-11-2013.

No comments:
Post a Comment