இஸ்லாத்தில் மூன்று இடங்களைத் தவிர வேறு எங்கும் புண்ணியத்தை நாடி பயணம் செய்வது கூடாது. அவ்வாறு செய்வது பாவமான காரியமாகும். புண்ணியத்தை நாடி பயணம் செய்யும் மூன்று இடங்களில் முதலாவது இடமாக நபி ( ஸல் ) அவர்கள் கஃபதுல்லாவைக் கூறியுள்ளார்கள்.
அபூஸயீதுல் குத்ரீ ( ரஸி ) அறிவிக்கிறார்கல். ( புண்ணியத்தைத் தேடி ) மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக்கூடாது.
1. அல் மஸ்ஜிதுல் ஹராம், 2. மஸ்ஜிதுன் நபவி, 3. மஸ்ஜிதுல் அக்ஸா என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள். ( நூல் : புகாரி 1189 ).
மேலும் செல்வமும், உடல் வலிமையும் உடையவர்கள் தம்முடைய வாழ்நாளில் ஒரு தடவையாவது கஃபா ஆலயம் சென்று ஹஜ் செய்வது கட்டாயக் கடமையாகும்.
அல்லாஹ் கூறுகிறான், மனிதர்களில் யார் ( உடலாலும் செல்வத்தாலும் ) அங்கு செல்வதற்கு சக்தி பெற்றிருக்கிறாகளோ அவர்கள் அல்லாஹ்விற்காக காபா எனும் அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும். ( அல்குர் ஆன் 3 : 98 ).
-- அப்துன்நாஸிர். செய்திச் சுரங்கம். அக்டோபர் 16 / 2013. புதங்கிழமை . தியாகத் திருநாள் .2013 சிறப்பு மலர்.
-- இதழ் உதவி : செய்திச் சுரங்கம். ஆசிரியர்: Dr. A.ஷேக் அலாவுதீன் . MD. ( AUC )., D.M.T., R.M.P. ( AA ). காரைக்கால்.

No comments:
Post a Comment