பொம்மை கொடுங்கள் உங்கள் குழந்தை புத்திசாலியாவான் !
" என்னடா இது... நம்ம குழந்தை எப்போ பாத்தாலும், பொம்மைகளோடேயே விளையாடிகிட்டு இருக்கானே?" என்று இனி எந்த அம்மாவும் புலம்பத் தேவையில்லை. காரணம், குழந்தைகளுடைய மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தும் ஆற்றல் பொம்மைகளுக்கு இருக்கிறதாம்!
' எஜுகேஷனல் டாய்ஸ் ' என்று சொல்லப்படுகிற குழந்தைகளின் கல்வி சம்பந்தமான, A, B, C, D ... போன்ற எழுத்துக்கள், பெயர்களோடு கூடிய பழங்கள், கார்கள், பல்வேறு நாடுகளின் தேசியக் கொடிகள், மேத்மேடிகல் பொம்மை விளையாட்டுகள் போன்றவற்றால், குழந்தைகளின் ஐக்யூ அதிகமாகிறது ' என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த நியூரோபயாலஜி துறை பேராசிரியர் எரிக் நட்ஸென்.
இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், குழந்தைகள் தாங்கள் கற்றுக்கொள்கிற விஷயங்களை வளர்ந்தவுடன் பெரும்பாலும் மறந்து விடுவார்கள்.. ஆனால், நிறைய பொம்மைகளோடு விளையாடிய குழந்தைகளின் மூளை செயல்திறன் அவர்கள் வளர்ந்த பிறகும் கூட, பழைய ஞாபகசக்தி குறையாமலும் அதே சுறுசுறுப்போடும் இயங்குகிறதாம்.
-- தகவலீஸ்வரி. குமுதம் சிநேகிதி , ஆகஸ்ட் 15, 2006.