மலைமேல் உள்ள கோயில்களுக்கு மகத்துவம் இருப்பதாகக் சொல்கிறார்களே ஏன்?
இந்து மதத்தைப் பொறுத்தவரை நதிகள் எப்படி புனிதமானவையோ, அதுபோன்று மலைகளும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக, தெய்வசக்தியை வரவழைத்துக்கொள்ளும் ஆற்றல் மலைகளுக்கு அதிகம். மகிமை வாய்ந்த மூலிகைகள்கூட மலைகளிலேயே தோன்றுகின்றன. இதனால் முனிவர்களும், சித்தர்களும் தவம் செய்வதற்கு ஏற்ற இடமாக ஆற்றங்கரைகளையும், மலைப்பிரதேசங்களையும் நாடி ஆசிரமங்களை அமைத்துக் கொண்டனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மலைகள் மீது இறைவனும் கோயில்கொண்டு விட்டால் அதன் மகிமை பலமடங்கு உயர்ந்து விடுகிறது. திருக்கோயில் அமைந்திருக்கும் மலைகளை ஒரு சிலர் ஆராய்ந்தபோது பகலில் சூரிய ஒளியும் இரவில் நிலவொளியும் மாறிமாறி படுகின்றபோது பல நோய்களை குணப்படுத்தக்கூடிய பிராணவாயு அதிகரிப்பதாக ஒப்புக்கொள்கின்றனர். இவ்வளவு தெய்வசக்தி வாய்ந்த கோயிலோடு கூடிய மலையை வணங்கி வழிபட்டு கிரிவலம் வருவதால் எல்லா நலன்களும் கிடைப்பதோடு தேக ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும் மகத்துவம் மலைக்கொயில்களுக்கு இருக்கிறது.
-- தினமலர் பக்திமலர். டிசம்பர் 27, 2012.

No comments:
Post a Comment