நவரத்தினங்களின் பெயர்களும், அவற்றின் நிறம், மற்றும் இயல்புகளும்:
ரத்தினம் ( சிவப்பு ) : நவக்கிரகங்களில் நடுநாயகமாகவும், தலைவனாகவும் விளங்கும் சூரியனின் அம்சம் பெற்றது.
முத்து ( வெள்ளை ) : சூரியனின் வெப்பக்கதிர்களை வாங்கி அவற்றை குளுமையாக பிரதிபலிக்கும் சந்திரனின் அம்சம் பெற்றது.
பவளம் ( இளம்சிவப்பு ) : கடலில் விளையும் இது செவ்வாய் கிரகத்தின் பிரதிநிதியாகக் கருதப்படுகிறது.
மரகதம் ( பச்சை ) : இது புதன் கிரகத்தின் அடையாளம் மற்றும் ஆதிக்கம் பெற்றது.
புஷ்பராகம் ( இளம்மஞ்சள் ) : இது குரு பகவான் பிரதிநிதி மற்றும் ஆதிக்கம் பெற்றது.
வைரம் ( வெள்ளை ) : நவக்கிரகங்களில் அதிக விலை கொண்டது. பூமியின் குறிப்பிட்ட பகுதிகளில் ஆழமான இடத்தில் ஏற்படும் அதிக வெப்பத்தால்
அங்குள்ள கல், மண் ஆகியவை எரிந்து கெட்டிப்பட்டு விளைச்சல் தன்மை பெறுவதால் வைரம் கிடைக்கிறது. இது
நவரத்தினங்களில் சுக்கிரனின் அம்சமும், ஆதிக்கமும் பெற்றது.
கோமேதகம் ( இளம்சிவப்புடன் மஞ்சள் கலந்த நிறம் ) : இது நவரத்தினங்களில் ராகுவின் அடையாளம் அல்லது ஆதிக்கம் பெற்றது.
மாணிக்கம் ( கரு நீலம் ) : சனி பகவானுக்கு உரியது.
வைடூரியம் ( வெளிர் மஞ்சள் நிறத்தில் வெண்மை ரேகையுடன் கூடியது ) : இது கேதுவின் அம்சமும், ஆதிக்கமும் பெற்றது.
-- தினமலர் . டிசம்பர் 23, 2012.

No comments:
Post a Comment