கார் சாவி தொலைந்தால் இனி கவலையில்லை
கார் சாவி தொலைந்து போய்விட்டதா? இனி கவலையில்லை. ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். இத்தகைய தொழில்நுட்ப வசதியை ஹுண்டாய் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த புதிய வசதி குறித்து ஹுண்டாய் நிறுவனம் ஜெர்மனியில் பிரபல ஐ30 கார் அறிமுக விழாவின்போது அறிவித்தது. இது குறித்து விபரம் வருமாறு:
புளூடூத்திற்கு பதிலாக, வயர்லெஸ் நியர் பீல்ட் கம்யூனிகேஷன் என்ற புதுவகை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த வசதியை ஹூண்டாய் நிறுவனம் சாத்தியமாக்கி உள்ளது. கார் ஜன்னலில் ஒட்டப்படும் சிறிய சீட்டு முன் ஸ்மார்ட் போனை அங்கும் இங்குமாக ஆட்டி, கார்களை பூட்டவும், திறக்கவும் முடியுமாம். இந்த வசதி அடுத்த 2 ஆண்டுகளுக்குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-- தினமலர் . டிசம்பர் 26, 2012.

No comments:
Post a Comment