நவரத்தினங்களில் முத்து, பவளம் இரண்டும் நீரிலும் மற்றவை பூமியில் ஏதாவதொரு பகுதியில் அரிதாக விளையும் தன்மை கொண்டவை.
ஜாதிக்கற்களுக்கு ஒளிரும் அல்லது பளிச்சிடும் தன்மை உண்டு. இவற்றிலிருந்து ஏற்படும் கதிர்வீச்சு தெய்வீக மற்றும் மருத்துவ குணம் கொண்டது என்பது பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
நவரத்தினங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு மனித உடலில் படும்போது அது உயிர்சக்திக்கு வலுவூட்டுகிறது வளர்சிதை மாற்றம் ( மெட்டாலிக் ஆக்டிவிடீஸ் ) என்று அறிவியல் கூறும் பழைய செல்கள் அழிதலும் புதிய செல்கள் உருவாதலும் ஒவ்வொரு மனித உடல்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நமது முன்னோர்கள் தெளிவாக அறிந்திருந்தனர். அதன் அடிப்படையிலேயே, சில குறிப்பிட்ட நோய் கண்டவர்கள்களுக்கு நிவாரணமளிக்கக் கூடிய கதிர் வீசக்கூடிய கற்களை அதிகம் அணிந்த தெய்வம் இருக்கும் தலத்துக்குச் சென்று வழிபடும்படி ஜோதிடர்கள் மூலம் அறிவுறுத்தச் செய்தனர். அதன் காரணமாகவே நவரத்தினக் கற்களை தெய்வங்கள் மீது அணிவித்து அவற்றை விளக்கொளியில் ( மின் ஒளி கூடாது ) பக்தர்கள்மீது படும்படி செய்திருந்தனர். இதற்காகத்தான் கோயிலுக்குள் ( கருவறைக்குள் ) செல்லும்போது சட்டை அணியாமல் செல்லவேண்டும் என்று அறிவுறுத்தி வந்தனர்.
முழுநிலவு எனப்படும் பவுர்ணமி நிலவொளிக்கு உயிர்சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு என்பதையும் நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர். அதனால்தான் பவுர்ணமி இரவு நிலவொளியில் மலையையோ அல்லது கோயிலையோ சுற்றிவர வேண்டும் என்று கிரிவலத்தை நிர்ணயித்திருக்கிறார்கள்.
-- தினமலர் . டிசம்பர் 23, 2012.

No comments:
Post a Comment