ராமாயணத்தில் வரும் பஞ்சவடி என்னும் இடம் கோதாவரி தீரத்தில் உள்ள நாசிக் என்ற இடமே. ' வடம் ' என்பது ஆலமரத்தின் பெயர். அங்கே ஐந்து ஆலமரங்கள் இருந்தன. அதனால் பஞ்சவடி என்ற பெயர் வந்தது. அங்கே வனவாசத்தின்போது ராமர் வந்து தங்கியபோது சூர்ப்பனகை வந்து மூக்கு அறுபட்டாள். நாசிகை என்பது மூக்கு. சூர்ப்பனகையின் மூக்கு விழுந்த இடமாதலில் ' நாசிகா ' என்று வந்து அதுவே ' நாசிக் ' ஆயிற்று.
'சாகா' மிருகம் என்று குரங்குக்குப் பெயர் சொல்வார்கள். ஆனால், அது சாகாது என்று பொருள் இல்லை! சாகா என்பது தழையைக் குறிக்கும். ஊனுண்ணாமல் தழை, தளிர் முதலியவற்றை உண்ணுவதால் குரங்குக்கு அந்தப் பெயர் வந்தது.
எத்தனையோ பழங்கள் இருக்க ஆண்டவன் வழிபாட்டுக்கு வாழைப்பழத்தை பயன்படுத்துவது ஏன்? என்று பலருக்குச் சந்தேகம். வாழைப்பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் என்பதே காரணம்!
-- ( ' விடைகள் ஆயிரம் ' என்ற நூலில், கி.வா.ஜகந்நாதன் ).
-- தினமணி கதிர். 1 - 4 - 2012.
-- இதழ் உதவி: K.கன்ணன், செல்லூர்.

No comments:
Post a Comment