( சிறப்பு ).
இந்த கலியுகத்தில் பிறப்புகள் யோனி வழியாகவே நிகழ்த்தாக வேண்டும். இவ்வாறு பிறவாதவர்களை 'அயோனிஜர்' என்பர். பாண்டவர்கள் வாழ்ந்த துவாபர யுகத்தில் யோனி மட்டுமின்றி, யோக வழியிலும் கருக் கொள்ள இடமளிப்பதாய் இருந்தது. ஆனால், மகாபாரத காலத்தில் யோக வழியில் பலர் பிறந்திருக்கின்றனர். பாண்டவர்கள் பிறப்பே யோகவழி முறைதான்! கர்ணனும் அந்த வழியில் காதைக் கருவறையாகக் கொண்டு பிறந்தவன். பின் அதுவே காரணப் பெயராகி விட்டது. 'கர்ணம்' என்றால் 'காது' என்று பொருள்.
துரியோதனன் உள்ளிட்ட அவன் சகோதர, சகோதரிகள் நூறுபேரும் கூட யோக சக்தியாலே மண் கலயத்தில் உயிர்ப்பிக்கப்பட்டனர்.
திரவுபதியின் தந்தையான துருபதன் கூட பத்துமாத சிசுவாக வளராமல் மிக குறுகிய காலத்தில் 'துரு' என்ற மரத்தின் நிழலில், இரு பாதங்களுக்கு கீழே குழந்தையாக உருவெடுத்து வந்த காரணத்தால் 'துருபதன்' என்றானவனே!
யோகம் என்பதற்கு 'வழிமுறை, அதிர்ஷ்டம், நிகரற்ற பயம், சேர்க்கை' என்று பல பொருள் உண்டு!
-- இந்திரா சவுந்தர்ராஜன். ( தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 2 ) தொடரில்...
-- தினமலர். ஆன்மிக மலர். இணைப்பு. சென்னை பதிப்பு . நவம்பர் 18, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன், விருகம்பாக்கம். சென்னை . 92.

No comments:
Post a Comment