( சிறப்பு ).
அற்புத காட்சியை இரவில் காணலாம்.
கடந்த சில நாட்களாக இரவில் வானத்தின் வடகிழக்கில் வெள்ளி கிரகமும், வியாழன் கிரகமும் அருகருகே தோன்றுகின்றன. வெள்ளி கிரகம் மிகவும் பிரகாசமாக காட்சி அளிக்கிறது. இப்போது வெள்ளிகிரகம் பூமியில் இருந்து 10 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால், வியாழன் கிரகம்74 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. 2 கிரகங்களும் சூரியனை சுற்றி வருகின்றன. வியாழன் விரைவில் சூரியனை சுற்றிவிடும்.
ஆனால் வெள்ளி சுற்ற ஆண்டுக்கணக்கில் ஆகும். அவ்வாறு வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் சுற்றும் 2 கிரகங்களும் அருகருகே வருவது இயல்பு. அதேபோல்தான் இப்போது வெள்ளி கிரகம் சுற்றும்போது அது வியாழன் அருகே வருகிறது. அவ்வாறு வரும்போது வெள்ளி கிரகமும், வியாழன் கிரகமும் அருகருகே தெரியும்.
இந்த காட்சி ஆண்டுக்கு 5 அல்லது 6 நாட்கள்தான் தெரியும். இந்த ஆண்டு 2 கிரகங்களும் அருகருகே தோன்றும் காட்சி கடந்த 30-ம் தேதி முதல் தெரிகிறது. தினமும் இரவில் 7 மணி முதல் 8.15 வரை அந்த காட்சியை காணலாம். 4-ஆம் தேதி இரவு வரை இந்த அற்புத காட்சியை சாதாரண கண்களிலேயே காணலாம்.
-- தினமலர் திருச்சி . வெள்ளி. ஜூலை 3, 2015.

No comments:
Post a Comment