( சிறப்பு ).
நாளை பிறக்க ஒரு நொடி தாமதமாகும்.
இன்று ஒரு லீப் நொடி சேர்க்கப்படுகிறது.
பூமியின் தற்போதைய சுழற்சி சீராக மெதுவாகக் குறைந்துகொண்டே வருகிறது. பொதுவாக ஒரு நாள் என்பது 86,400 நொடிகள் கொண்டது. கடைசியாக 1820-ம் ஆண்டில்தான் மிகச் சரியாக 24 மணி நேரம் என்ற கால அளவு இருந்தது. புவி வெப்பமடைதல், சூரியன், நிலா, பூமிக்கு இடையிலான ஈர்ப்பு விசைப் போட்டிகள், கடல் அலைகளின் அசைவுகள் உள்ளிட்டவை காரணமாக பூமியின் சுழற்சி வேகம் குறைந்து கொண்டே வருகிறது.
இதனால், ஒரு நாளுக்கு 86,400,0002 நொடிகளாகிறது. அதாவது, 2 மில்லி செகண்டுக்கள் அல்லது ஒரு நொடியில் 2 ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம் கூடுதலாக ஆகிறது. இந்த தாமதம் ஆண்டு முழுக்க தொடர்ந்து நடக்கிறது.
எனவே இந்த நேரத்தை ஈடுகட்ட , இந்தக் கூடுதல் நேரம் ஒரு நொடி சேர்ந்தவுடன் அது, வழக்கமாக நாம் பின்பற்றும் நேரத்தில் ( யு.டி.சி ) ஜூன் 30-ம் தேதி அல்லது டிசம்பர் 31-ம் தேதி அன்று ஒரு நொடி நிறுத்தி வைக்கப்பட்டு சரி செய்யப்படுகிறது.
வழக்கமாக, நள்ளிரவு 23:59:59 மணிக்குப் பிறகு அடுத்த நாள் 00:00:00: என்று தொடங்கும். இன்று ( ஜூன் 30-ம் தேதி ) நள்ளிரவு லீப் நொடி சேர்க்கப்படும்.
இதனால், ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு அடுத்த நாள் தொடங்குவதற்கு முன்பு 23:59:60 என ஒரு நொடி சேர்க்கப்பட்டு
( துல்லியமாகச் சொல்வதானால் ஒரு நொடி நிறுத்தி வைக்கப்பட்டு) பின்னர் ஜூலை 1-ம் தேதி 00:00:00 என மாறும் என்று நாசா தெரிவித்துள்ளது.
லீப் நொடி முறை முதன்முதலில் 1972-ம் ஆண்டு பின்பற்றப்பட்டது. அதன் பிறகு, சுமார் 26 முறை இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் லீப் நொடி சேர்க்கப்படுகிறது. இது நான்காவது முறையாகும்.
-- பி.டி.ஐ. ( சர்வதேசம் ).
-- 'தி இந்து' நாளிதழ். செவ்வாய், ஜூன் 30, 2015.

No comments:
Post a Comment