( சிறப்பு ).
இப்போதாவது வந்ததே என்றுதான் நாம் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டும். ஜூன் 29-ம் தேதியன்று தொடங்கப்பட்ட சென்னை ஆலந்தூருக்கும் கோயம்பேட்டுக்கும் இடையேயான மெட்ரோ ரயில் திட்டம், சரியாக 115 ஆண்டுகள் தாமதமாகத்தான் நமக்கு வந்துள்ளது. ஆம், பாரீஸ் நகருக்கு மெட்ரோ ரயில் வந்தது 1900-ம் ஆண்டு. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்தும் ஒருசில மெட்ரோக்களில் பாரீஸும் ஒன்று. 214 கிலோ மீட்டர்களில் 303 ஸ்டேஷன்களை இணைக்கிறது பாரீஸ் மெட்ரோ. பூமிக்கு கீழே ஐந்து அடுக்குகளில் ரயிகள் போய்கொண்டும் வந்துகொண்டும் இருக்கின்றன. ஐந்தாவது அடுக்கில், ஓட்டுநர் இல்லாமல் தானே இயங்கும் ரயில். மொத்தம் 700 ரயில்கள்.
சென்னையின் மக்கள் தொகையைவிட பாரீஸின் மக்கள் தொகை பாதிதான். சென்னை 44 லட்சம். பாரிஸ் 22 லட்சம். ஆனால், ஒரு நாளில் பாரிஸ் மெட்ரோவைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 42 லட்சம்! புற நகர்களில் வசிக்கும் மக்களும் பெருமளவில் மெட்ரோவைப் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் இந்தக் கணக்கு. இது பற்றி ஒரு நகைச்சுவையும் உண்டு. பாரிஸ் நகரின் மக்கள் தொகையைவிட இரண்டு மடங்கு மக்கள் பூமிக்குள் இருக்கிறார்கள்! காரணம், அங்கே மெட்ரோ ரயில்கள் அநேகமாக பூமிக்குள்தான் ஓடுகின்றன.
-- சாரு நிவேதிதா. எழுத்தாளர். ( கருத்துப்பேழை ).
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஜூலை , 2, 2015.
No comments:
Post a Comment