Thursday, March 12, 2015

சோதனைக் குழாய் குழந்தை.

 ஆணிடமிருந்து  ஒரு  உயிரணுவை  எடுப்பார்கள்.  அதில்  உள்ள  மையப்பொருளான  ' நியூக்ளியஸ்'சை  அதிலிருந்து  பிரித்தெடுப்பார்கள்.  இதில்தான்  அவரது  டி.என்.ஏ  இருக்கிறது.  அதாவது  குரோமோஸோம்கள்  அடங்கிய  மரபணு  ஜோடி.  ஒரு  மனிதரின்  தோற்றத்தைத்  தீர்மானிப்பது  மரபணுதான்.  இப்படி  பிரித்தெடுக்கப்படும்  நியூக்ளியஸை  அந்த  மனிதரின்  மனைவியின்  கருமுட்டையோடு  இணைப்பார்கள்.  இவை  இரண்டும்  சரியான  விதத்தில்  சேர  சிறு  அளவில்  மின்சாரம்  ஒன்று  பாய்ச்சப்படும்.    இதன்மூலம்  கருமுட்டையும்  ஆணின்  உடலிலிருந்து  நீக்கப்பட்ட  நியூக்ளியஸும்  இணைந்து  ஒரே  உயிரணுவாக  மாறுகிறது.  இந்த  உயிரணு  பெண்ணின்  கருப்பைக்குள்  வைக்கப்படுகிறது. அதற்குப்  பிறகு  வழக்கம்  போலவேதான்  கருச்  சுமத்தலும்  பிரசவமும்.  இதுதான்  சோதனைக்  குழாய்  முயற்சி.
---அறிவியல்  தகவல்கள் , தினமலர்  இணைப்பு,  17  ஜூன், 2012. 

Wednesday, March 11, 2015

முயலாமை.முயலாமை.


     ஒரு  பள்ளிக்கூட  விழாவிற்கு  கலைவாணர்  பேசச்  சென்றார்.  அது  ஆரம்பப்  பள்ளி  ஆதலால்  ஒரு  கதையோடு  பேச்சைத்  தொடங்கினார்.
     'ஒரு  ஊர்ல முயலும்  ஆமையும்  இருந்தன.  அவை  இரண்டுக்கும்  ஒரு  நாள்  ஓட்டப்பந்தயம்  நடந்துச்சு '  என்று  அவர்  சொல்லிகொண்டு  வரும்போதே  பள்ளிப்  பிள்ளைகள்  எல்லாம்  ' தெரியும்  தெரியும் '  என்று  சத்தமிட்டார்கள்.  உடனே  கலைவாணர்,  ' என்ன  தெரியும்  சொல்லுங்கள்?'  என்றார்.
     'ரெண்டுக்கும்  போட்டி  நடந்துச்சு.  சரி,  எது  ஜெயித்தது?'  என்று  கேட்டார்.
     ' ஆமை  ஜெயிச்சது.  முயல்  தோற்றது'  என்றனர்  பிள்ளைகள்.  அதற்கு  கலைவாணர்,  அப்படி  சொல்லக்கூடாது.  முயல்  ஆமையால்  தோற்றது.  எங்கே  சொல்லுங்க.  முயல்  ஆமையால்  தோற்றது.  முயற்சி  இல்லாதவர்கள்  வலிமையுடையவர்களாக  இருந்தாலும்  தோற்றுத்தான்  போவார்கள்.  அதுக்குத்தான்  இந்த  கதையில  முயலும்  ஆமையும்  போட்டி  போட்டதாக  காட்டுறாங்க.  இல்லாட்டி  வேற  மிருகத்தை  சொல்லியிருக்கலாம்.'  என்று  கூறினார்.
      இந்தக்  கதையை  எழுதிய  அந்த  எழுத்தாளருக்கு  இப்படி  ஒரு  செய்தி  இந்த  கதையில்  இருக்கிறது  என்று  தெரியுமோ,  தெரியாதோ?  ஆனால்,  கலைவாணர்  தன்  சிந்தனையினால்  இதை  விளக்கினார்.
-- கு.ஞானசம்பந்தன்  எழுதிய  ' இன்றைய  சிந்தனை ' நூலிலிருந்து.
-- தினமலர்  இணைப்பு,  17  ஜூன், 2012.  

கரப்பான் பூச்சி


Tuesday, March 10, 2015

நவக்கிரகங்கள்.

நவக்கிரகங்கள்  என்றால்  9 ம்  ஒன்றை  ஒன்று  பார்க்காத  ஒன்பது  ரகம்.
திருவாரூரில் நவக்கிரகங்களை  வரிசையாக  காணலாம்.
தஞ்சை  பிரகதீஸ்வரர்  ஆலயத்தில்  லிங்க  வடிவில்  காணலாம்.
சூரியனார்  கோயிலில்  தனித்தனி  கோயில்களில்  காணலாம்.
சிதம்பரத்தில்  அவரவர்  மனைவியர்களுடன்  காணலாம்.
சுசீந்திரத்தில்  அவரவர்  வாகனங்களுடன்  காணலாம்.
வேலூரில் நவக்கிரகங்கள்,  விநாயகரை  பார்த்தவாறு  இருக்கும்.
-- மல்லிகா நடராஜன்,  சேலம்.
--  தினமலர் இணைப்பு.  27  அக்டோபர் , 2012. 

Monday, March 9, 2015

வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

  ஒரு  அரசர்,  மந்திரியை  அழைத்து,  ' இங்கு  உண்டு,  அங்கு  இல்லை',  'இங்கு  இல்லை,  அங்கு  உண்டு',  'இங்குமில்லை,  அங்குமில்லை',
'இங்குமுண்டு,  அங்குமுண்டு'  இதற்கான  விளக்கம்  என்ன  என்று  கேட்டார்.
     மறுநாள்  மந்திரி  தன்னோடு  ஒரு  கொள்ளைக்காரன்,  ஒரு  ஞானி,  ஒரு  பிச்சைக்காரன்,  ஒரு  வள்ளல்  இவர்களை  அழைத்து  வந்து  நிறுத்தி,  இவர்கள்  தான்  தங்கள்  கேள்விகளுக்குப்  பதில்கள்  என்றார்.
     அரசன்  எப்படி  என்றவுடன்,  ' கொள்ளைக்காரன் -  கொள்ளையடித்து,  இவ்வுலகில்  மகிழ்ச்சியாக  இருக்கிறான்,  மேல்  உலகில்  அவனுக்கு  மகிழ்ச்சியில்லை.  இதுதான்  இங்கு  உண்டு,  அங்கு  இல்லை '  என்றார்.
     'ஞானி - இவர்  சதா  இறைவனையே  நினைப்பவர்.  இவருக்கு  இங்கு  இல்லை,  அங்கு  உண்டு'.
     ' பிச்சைக்காரன் - இவன்  எந்த  நல்ல  செயலும்  செய்யவில்லை.  எனவே  இவனுக்கு  இந்த  உலகமும்  இல்லை,  அந்த  உலகமும்  இல்லை'.
     ' வள்ளல் - தன்னிடம்  உள்ளதை  பிறருக்கு  கொடுத்து  தானும்  மகிழ்கிறார்,  பிறரையும்  மகிழ்விக்கிறார்.  எனவே  இங்கும்  உண்டு,  அங்கும்  உண்டு'  என்றார்.
     மந்திரியை  பாராட்டி,  தானும்  வள்ளல்  போல்  வாழ்வேன்  என்று  உறுதியளித்தார்  மன்னன்.  மன்னனைப்போல்  நாமும்  வள்ளலாக  வாழ  முயற்சிப்போம்.
-- செந்தமிழ்  ராம்,  செம்பொன்னார்கோயில்.
-- தினமலர் இணைப்பு.  27  அக்டோபர் , 2012. 

Sunday, March 8, 2015

பூத வேள்வி.

  கிழக்கில்  இந்திரன்,  தெற்கில்  எமன்,  மேற்கில்  வருணன்,  வடக்கில்  சூரியன்  ஆகியோர்க்கும்,  அவரவர்  பரிவாரங்களுக்கும்  வரிசைப்படி  பலி  வைத்துப்  பூத  வேள்வி  செய்க.
      தேவர்களுக்கு  வீட்டு  வாயிற்படி,  நீர்த்  தேவதைகளுக்கு  நீர்  நிலை,  வன  தேவதைகளூக்கு  உரல்  அல்லது  உலக்கை.  இவ்விடங்களில்  பலிப்  பொருள்  வைத்துப்  படைக்க.
      நடு  வீட்டில்  பிரம்மனுக்கும்,  வடகிழக்கு  மூலையில்  லட்சுமிக்கும்,  தென்மேற்கு  மூலையில்  பத்ரகாளிக்கும்  படையல்  இடலாம்.  படுக்கையின்  தலை  மாட்டில்  லட்சுமிக்கும்  கால்மாட்டில்  பத்ரகாளிக்கும்  படையல்  இடலாம்.
      மேல்  மாடத்தின்  திறந்த  வெளியில்,  அல்லது  வீட்டின்  பின்புறத்தில்  தென்  திசையாக  மண்டியிட்டுப்  பரம்பொருளுக்குப்  பெருஞ்சோற்றினைப்  படையல்  போடுக.
      திசைக்  கடவுளர்,  பகலில்  இரவில்  திரியும்  உயிகளுக்கு  வீட்டு  முற்றத்தில்  படையல்  போடுக.
-- காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்
---  இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு.