Wednesday, March 11, 2015

முயலாமை.முயலாமை.


     ஒரு  பள்ளிக்கூட  விழாவிற்கு  கலைவாணர்  பேசச்  சென்றார்.  அது  ஆரம்பப்  பள்ளி  ஆதலால்  ஒரு  கதையோடு  பேச்சைத்  தொடங்கினார்.
     'ஒரு  ஊர்ல முயலும்  ஆமையும்  இருந்தன.  அவை  இரண்டுக்கும்  ஒரு  நாள்  ஓட்டப்பந்தயம்  நடந்துச்சு '  என்று  அவர்  சொல்லிகொண்டு  வரும்போதே  பள்ளிப்  பிள்ளைகள்  எல்லாம்  ' தெரியும்  தெரியும் '  என்று  சத்தமிட்டார்கள்.  உடனே  கலைவாணர்,  ' என்ன  தெரியும்  சொல்லுங்கள்?'  என்றார்.
     'ரெண்டுக்கும்  போட்டி  நடந்துச்சு.  சரி,  எது  ஜெயித்தது?'  என்று  கேட்டார்.
     ' ஆமை  ஜெயிச்சது.  முயல்  தோற்றது'  என்றனர்  பிள்ளைகள்.  அதற்கு  கலைவாணர்,  அப்படி  சொல்லக்கூடாது.  முயல்  ஆமையால்  தோற்றது.  எங்கே  சொல்லுங்க.  முயல்  ஆமையால்  தோற்றது.  முயற்சி  இல்லாதவர்கள்  வலிமையுடையவர்களாக  இருந்தாலும்  தோற்றுத்தான்  போவார்கள்.  அதுக்குத்தான்  இந்த  கதையில  முயலும்  ஆமையும்  போட்டி  போட்டதாக  காட்டுறாங்க.  இல்லாட்டி  வேற  மிருகத்தை  சொல்லியிருக்கலாம்.'  என்று  கூறினார்.
      இந்தக்  கதையை  எழுதிய  அந்த  எழுத்தாளருக்கு  இப்படி  ஒரு  செய்தி  இந்த  கதையில்  இருக்கிறது  என்று  தெரியுமோ,  தெரியாதோ?  ஆனால்,  கலைவாணர்  தன்  சிந்தனையினால்  இதை  விளக்கினார்.
-- கு.ஞானசம்பந்தன்  எழுதிய  ' இன்றைய  சிந்தனை ' நூலிலிருந்து.
-- தினமலர்  இணைப்பு,  17  ஜூன், 2012.  

No comments: