ஆணிடமிருந்து ஒரு உயிரணுவை எடுப்பார்கள். அதில் உள்ள மையப்பொருளான ' நியூக்ளியஸ்'சை அதிலிருந்து பிரித்தெடுப்பார்கள். இதில்தான் அவரது டி.என்.ஏ இருக்கிறது. அதாவது குரோமோஸோம்கள் அடங்கிய மரபணு ஜோடி. ஒரு மனிதரின் தோற்றத்தைத் தீர்மானிப்பது மரபணுதான். இப்படி பிரித்தெடுக்கப்படும் நியூக்ளியஸை அந்த மனிதரின் மனைவியின் கருமுட்டையோடு இணைப்பார்கள். இவை இரண்டும் சரியான விதத்தில் சேர சிறு அளவில் மின்சாரம் ஒன்று பாய்ச்சப்படும். இதன்மூலம் கருமுட்டையும் ஆணின் உடலிலிருந்து நீக்கப்பட்ட நியூக்ளியஸும் இணைந்து ஒரே உயிரணுவாக மாறுகிறது. இந்த உயிரணு பெண்ணின் கருப்பைக்குள் வைக்கப்படுகிறது. அதற்குப் பிறகு வழக்கம் போலவேதான் கருச் சுமத்தலும் பிரசவமும். இதுதான் சோதனைக் குழாய் முயற்சி.
---அறிவியல் தகவல்கள் , தினமலர் இணைப்பு, 17 ஜூன், 2012.
---அறிவியல் தகவல்கள் , தினமலர் இணைப்பு, 17 ஜூன், 2012.
No comments:
Post a Comment