Thursday, March 26, 2015

வாஸ்து புருஷன்.

வாஸ்து  புருஷன்  விழிப்பு  காலங்களில்  பூமி  பூஜை  செய்யலாமா?  அல்லது நாள்  நட்சத்திரம்  பார்க்க  வேண்டுமா?
வாஸ்து  புருஷன்  நித்திரை  விடும்  காலங்களில்  பூமி  பூஜை  செய்வதற்கு  நாள்  நட்சத்திரம்  பார்க்க  வேண்டியதில்லை.இந்த  விஷயம்  பூமி  பூஜைக்கான  சிறப்பு  விதி.  90  நிமிடங்கள்  கண்  விழித்திருப்பார்.  இந்த  நேரத்தில்  18  நிமிடம்  பல்  குலக்குதல், 18  நிமிடம் குளித்தல்,  18  நிமிடம் சிவபூஜை,  18  நிமிடம் சாப்பிடுதல்,  18  நிமிடம்  தாம்பூலம்  போடுதல்  ஆகிய  5  வேலைகளைச்  செய்து  கொள்கிறார்.  இவற்றில்  மற்றைய  நேரங்களை  விடுத்து  கடைசியாகத்  தாம்பூலம்  போடும்  18  நிமிட  நேரத்தில்  மனை  முகூர்த்தம் பூமி  பூஜை  செய்தால்,  கட்டட  வேலைகள்  நல்லபடியாக  முடியும்.
--  மயிலாடுதுறை  ஏ.வி.சுவாமிநாத  சிவாச்சாரியார்.
-- தினமலர் ,  பக்திமலர் .  1 - 11 - 2012. 

Wednesday, March 25, 2015

நவக்கிரகங்களின் தேவியர்.

சூரியன்..............-- உஷா,  பிரத்யுஷா.
சந்திரன்.............-- கிருத்திகா,  ரோகிணி.
செவ்வாய்..........--  சக்திதேவி.
புதன்................--  ஞானதேவி.
குரு .................--  தாராதேவி,  சங்கினி  தேவி.
சுக்கிரன்...........--  கஷூரி  சிருங்கினி,  சுபகீர்த்தி.
சனி.................--  ஜோஷ்டா  தேவி.
ராகு................--  ஸிம்ஹி  தேவி.
கேது...............--  சித்திரலேகா.
(  இந்த  விவரம்  மாயூரம்  சேது  ராமநாத  குருக்கள்  எழுதிய  ' நவக்கிரகம் .  என்ற  நூலில்  இருந்து  எடுத்தது )
-- மயிலாடுதுறை  ஏ.வி.சுவாமிநாத  சிவாச்சாரியார்.
-- தினமலர் ,  பக்திமலர் .  1 - 11 - 2012. 

Tuesday, March 24, 2015

பிராமணன் உணவு.

  பூண்டு,  முள்ளங்கி,  முருங்கை,  மண்காளான்,  மரக்காளான், வெங்காயம்,  தீய  இடத்தில்  விளைந்த  காய்கறிகள்  மரத்தில்  தோன்றும்  செம்மெழுகு,  நீரால்  புளிப்பேறின  கனி,  கிழங்கு,  மலர், இவற்றின்  ஊறுகாய்கள்  ஆகியவற்றைப்  பிராமணர்  உண்ணுதல்  கூடாது.
     புளித்த  பால்,  சீம்பால்,  தயிர்,  புளித்த  தயிர்,  அதன்  வெண்ணெய்,  ஒற்றைக்  கொம்பு  மிருகங்களின்  பால்,  பொலியும்  பருவப்  பசுவின்  பால்,  ஒட்டகப்பால்,  ஆண்கன்று  ஈன்ற  பத்து  நாட்களாகாத  பசு,  ஆடு,  எருமைப்பால்  இவற்றை  அருந்தக்கூடாது.
     ஈன்ற  பெண்  கன்றை  இழந்த  பசு,  சினைப்பசு,  செம்மறியாடு,  காட்டெருமை  இவற்றின்  பால்  அருந்தலாம்.
     மாமிசம்  உண்பது  தம்மைத்  தாம்  உண்பது  போல,  மீன்  மாமிசமோ  அனைத்து  மாமிசங்களையும்  உண்பது  போல;  எனவே  மீன்  மாமிசம்  உண்ணக்  கூடாது.
     வேள்வியில்  மிஞ்சிய  புலாலை  உண்னலாம்.  ஓரிரவு  கழிந்த  பின்னரும்  கூட  அதை  உண்ணலாம்.  எண்ணெய்ப்  பதார்த்தங்களையும்  அவ்வாறே  உண்ணலாம்.
     உண்ணற்க  என்பனவற்றை  உண்ணும்  பிராமணன்  இழிந்தவன்.  அறியாது  உண்டால்  சீர்ந்தபனம்,  சந்திராயனம்  செய்திடுக.  தடுக்கபட்ட  மற்றேதேனும்  உண்டால்,  ஒரு  நாள்  உண்ணாமல்  இருந்தால்  அப்பாவம்  அகலும்.  அறியாதுண்ட  பாவம்  நீங்குவதற்கு  ஆண்டு  முழுவதும்  ' பிரஜாபத்ய  கிருக்சரம் '  சடங்கு  அனுசரிக்க.
-- காவ்யா  மநுதர்மம்  என்ற  நூலில்  தமிழ்நாடன்.
-- இதழ் உதவி:  P.சம்பத்  ஐயர்,  திருநள்ளாறு. 

Monday, March 23, 2015

தகுவன -- தகாதன.

  பள்ளியறையிலன்றி,  மாதரைப்  பிறவிடத்து  நிர்வாணமாய்ப்  பார்க்கலாகாது.  கண்ணுக்கு  மையிடும்போது,  எண்ணெய்  நீராடும்போது,  கவனக்  குறைவாய்  அமர்ந்துள்ளபோது,  இருமல் - கோட்டுவாய்  உள்ள  போது,  மேலாடை  நெகிழ்ந்தபோது,  மனைவியாயினும்  பார்த்தல்  கூடாது.
      மாதவிலக்கான  மூன்று  நாட்களுக்குள்  மனைவியைக்  கூடுதல்  கெடுதல்.  ஒரே  படுக்கையும்,  அவளோடு  பேசுவதும்  கூடாது.  அனுமதிக்கப்பட்ட  நாட்களில்  இல்லின்பம்  நுகர்வோன்  மேன்மைகள்  பெறுவான்.  அல்லாத  அவனுக்கு  வலிமை,  வாழ்நாள்,  பார்வை,  ஞானம்  குறையும்.
     தலைக்குக்  குளித்த  பின்னர்,  அந்நாளே  எண்ணெய்  முழுக்குக்  கூடாது.
     அமாவாசை,  சதுர்த்தசி,  அஷ்டமி,  பௌர்ணமி,  ஏகாதசி  நாட்களிலும்  மாதவிலக்கின்  பின்  தலை  முழுகி  வந்த  நாளிலும்  உறவு  கொள்ளக்  கூடாது.
     பிறன்  மனையாளைக்  கூடின்  ஆயுள்  குறையும்.
     தினவற்ற  பொழுது,  பிறப்புறுப்பை,  உடல்  உறுப்புகளை,  முடியைத்  தொடக்கூடாது.
     சூத்திரன்  முன்னிலையில்  பிராமணனுக்கு  தரும,  நோன்பு  உரைக்கக்  கூடாது.  ஓமம்  செய்த  மீதமும்,  உணவு  மீதமும்  சூத்திரனுக்குத்  தருவது  கூடாது.  இம்மைப்  பயன்  நூல்களான  பொருளியல்  போன்றவற்றையும்  சூத்திரனுக்குக்  கற்பித்தல்  கூடாது.
-- காவ்யா  மநுதர்மம்  என்ற  நூலில்  தமிழ்நாடன்.
-- இதழ் உதவி:  P.சம்பத்  ஐயர்,  திருநள்ளாறு. 

Sunday, March 22, 2015

கண் அசைவில் செல்போன்

வந்தாச்சு  புது  சாப்ட்வேர்  --  கண்  அசைவில்  செல்போன்
      கண்  அசைவினால்  டேப்லட்  பிசி  மற்றும்  செல்போன்களை  கட்டுப்படுத்தும்  சாப்ட்வேரை  டென்மார்க்  நிறுவனம்  உருவாக்கியுள்ளது.
      இந்த  சாப்ட்வேர்  இன்பிராரெட்டை  பயன்படுத்தி  இயங்குகிறது.  இந்த  கதிர்  கண்ணின்  மணியில்  பட்டு  எதிரொலிக்கும்போது,  அதை  சாதனத்தின்  காமிரா  மூலம்  படம்  பிடித்துக்  கொள்ளுமாம்.  இதன்  மூலம்  வாடிக்கையாளரின்  பார்வை  மூலமாகவே  திரையில்  தோன்றும்  பக்கத்தை  ஸ்குரோல்  செய்யவோ  அல்லது  கிளிக்  செய்யவோ  இயலும்  என  தெரிகிறது.  உதாரணமாக  செல்போன்  அல்லது  டேப்லட்  பிசி  சாதனத்தில்  வாடிக்கையாளர்கள்  இ - புக்  படிக்கும்போது,  அந்த  பக்கத்தின்  கடைசி  பகுதியை  பார்க்க  விரும்புகிறார்கள் என்றால்,  அதை  கண்கள்  மூலமாகவே  தெரிந்துகொண்டு  அதற்கு  ஏற்ப,  அந்த  பக்கத்தின்  கீழ்  பகுதிக்கு  ஸ்குரோல்  ஆகவும்,  தேவையென்றால்  பக்கத்தை  திருப்பவும்  இது  பயன்படும்  வகையில்  இந்த  சாப்ட்வேர்  உருவாக்கப்பட்டுள்ளது.
--- தினமலர்.  28 - 10 - 2012 . 

Saturday, March 21, 2015

சூரியன்.

  சூரியன்  உதயமாகும்  சமயத்தில்  அவரை  இந்திரன்  பூஜை  செய்கிறான்.  மத்தியானத்தில்  யமனும்,  அஸ்தமனத்தில்  வருணனும்,  அர்த்த  ராத்திரியில்  சந்திரனும்  பூஜை  செய்கிறார்கள்.
     விஷ்ணு,  சிவன்,  ருத்ரன்,  பிரம்மா,  அக்னி,  வாயு,  நிருதி,  ஈசானன்  என்று  எல்லா  தேவர்களும்  இரவில்  சூரியனின்  கல்யாண  குணங்களை  ஆராதிக்கிறார்கள்.
     தேவர்கள்,  அசுரர்கள்,  மனிதர்கள்  ஆகியோர்  சூரியனின்  சிருஷ்டியே!  அக்னி  பூர்வமாக  வேள்வியில்  அளிக்கும்  ஆஹுதிகள்  சூரிய  பகவானையே  அடைகின்றன.  சூரிய  பகவானின்  அருளால்தான்  வளர்ச்சியும்  செழுமையும்  உண்டாகின்றன.
      மார்கழி  மாதம்  சுக்ல  பட்ச  சப்தமியன்று  சூரிய  பகவானுக்கு  சிரத்தையாக  அபிஷேக  ஆராதனைகள்  செய்ய  வேண்டும்.  இதைச்  செய்பவர்  அக்னி  லோகத்திற்கு  விமானத்தில்  ஏறிச்  செல்வார்கள்.
     ரத  சப்தமி  விரதம்  இருந்து  பலன்  பெற்றவர்களுள்  தரும  புத்திரர்  முதன்மையானவர்  எனலாம்.  அதன்  பலனாகத்தான்  அவர்  வனவாசம்  இருக்கும்  காலத்தில்  சூரிய  பகவான்  அட்சய  பாத்திரத்தைக்  கொடுத்தார்.  அதைக்  கொண்டு  எல்லோருக்கும்  குறையாமல்  உணவு  அளித்ததோடு  தன்  தம்பிகளுடனும்,  பாஞ்சாலியுடனும்  சுகமாக  இருந்தார்.
--  லட்சுமி ராஜரத்னம்.  ( பவிஷ்ய புராணம்.)
--  குமுதம் பக்தி ஸ்பெஷல்.  அக்டோபர்  16 - 31, 2012. 

Friday, March 20, 2015

ஸ்படிக லிங்கம்.

 ஸ்படிக  லிங்கம்  என்பது  பொதுவாக  நீண்ட  குச்சி  போன்ற  வடிவமும்,  சுமார்  ஒரு  இன்ச்சிலிருந்து  பத்து  இன்ஸ்  வரை  உயரமும்  ஆறு  முகங்கள்  அல்லது  பட்டைகள்  உடையதாகவும்  இருக்கும்.  இதன்  தனிச்  சிறப்பு  என்னவென்றால்  இது  ஒரு  வினாடிக்கு  32,768  தடவை  நேர்மறையாக  அதிரக்கூடிய  தன்மை  உடையது.  அதனால்தான்  ஒரு  ஸ்படிக  லிங்க  கருங்கற்களால்  செய்யப்பட்ட  ஆயிரம்  லிங்கங்களுக்குச்  சமம்  என்றும்,  12  லட்சம்  ஸ்படிக  லிங்கங்கள்  ஒரு  பாண  லிங்கத்துக்குச்  சமம்  என்றும்  சாஸ்திரங்கள்  கூறுகின்றன.
     பாண  லிங்கம்  என்பது  கண்டகி  நதிக்கரையில்  இயற்கையாகக்  கிடைக்கும்  சாளக்கிராமங்களைப்  போல  நர்மதை  நதியில்  கிடைக்கும்  இயற்கையான  லிங்கங்களாகும்.
     ஸ்படிக  லிங்கத்துக்கு  விபூதியால்  அபிஷேகம்  செய்தால்  கர்ம  வினைகள்  நீங்கும்.  முன்பு  சொன்னது  போல  இதன்  நேர்மறையான  அதிர்வுகள்  நவகிரகங்களின்  கெட்ட  பலனை  பெரிதும்  அழிக்கும்.
-- ஸ்ரீஜா  வெங்கடேஷ்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  அக்டோபர்  16 - 31, 2012.