Saturday, March 21, 2015

சூரியன்.

  சூரியன்  உதயமாகும்  சமயத்தில்  அவரை  இந்திரன்  பூஜை  செய்கிறான்.  மத்தியானத்தில்  யமனும்,  அஸ்தமனத்தில்  வருணனும்,  அர்த்த  ராத்திரியில்  சந்திரனும்  பூஜை  செய்கிறார்கள்.
     விஷ்ணு,  சிவன்,  ருத்ரன்,  பிரம்மா,  அக்னி,  வாயு,  நிருதி,  ஈசானன்  என்று  எல்லா  தேவர்களும்  இரவில்  சூரியனின்  கல்யாண  குணங்களை  ஆராதிக்கிறார்கள்.
     தேவர்கள்,  அசுரர்கள்,  மனிதர்கள்  ஆகியோர்  சூரியனின்  சிருஷ்டியே!  அக்னி  பூர்வமாக  வேள்வியில்  அளிக்கும்  ஆஹுதிகள்  சூரிய  பகவானையே  அடைகின்றன.  சூரிய  பகவானின்  அருளால்தான்  வளர்ச்சியும்  செழுமையும்  உண்டாகின்றன.
      மார்கழி  மாதம்  சுக்ல  பட்ச  சப்தமியன்று  சூரிய  பகவானுக்கு  சிரத்தையாக  அபிஷேக  ஆராதனைகள்  செய்ய  வேண்டும்.  இதைச்  செய்பவர்  அக்னி  லோகத்திற்கு  விமானத்தில்  ஏறிச்  செல்வார்கள்.
     ரத  சப்தமி  விரதம்  இருந்து  பலன்  பெற்றவர்களுள்  தரும  புத்திரர்  முதன்மையானவர்  எனலாம்.  அதன்  பலனாகத்தான்  அவர்  வனவாசம்  இருக்கும்  காலத்தில்  சூரிய  பகவான்  அட்சய  பாத்திரத்தைக்  கொடுத்தார்.  அதைக்  கொண்டு  எல்லோருக்கும்  குறையாமல்  உணவு  அளித்ததோடு  தன்  தம்பிகளுடனும்,  பாஞ்சாலியுடனும்  சுகமாக  இருந்தார்.
--  லட்சுமி ராஜரத்னம்.  ( பவிஷ்ய புராணம்.)
--  குமுதம் பக்தி ஸ்பெஷல்.  அக்டோபர்  16 - 31, 2012. 

No comments: