பூண்டு, முள்ளங்கி, முருங்கை, மண்காளான், மரக்காளான், வெங்காயம், தீய இடத்தில் விளைந்த காய்கறிகள் மரத்தில் தோன்றும் செம்மெழுகு, நீரால் புளிப்பேறின கனி, கிழங்கு, மலர், இவற்றின் ஊறுகாய்கள் ஆகியவற்றைப் பிராமணர் உண்ணுதல் கூடாது.
புளித்த பால், சீம்பால், தயிர், புளித்த தயிர், அதன் வெண்ணெய், ஒற்றைக் கொம்பு மிருகங்களின் பால், பொலியும் பருவப் பசுவின் பால், ஒட்டகப்பால், ஆண்கன்று ஈன்ற பத்து நாட்களாகாத பசு, ஆடு, எருமைப்பால் இவற்றை அருந்தக்கூடாது.
ஈன்ற பெண் கன்றை இழந்த பசு, சினைப்பசு, செம்மறியாடு, காட்டெருமை இவற்றின் பால் அருந்தலாம்.
மாமிசம் உண்பது தம்மைத் தாம் உண்பது போல, மீன் மாமிசமோ அனைத்து மாமிசங்களையும் உண்பது போல; எனவே மீன் மாமிசம் உண்ணக் கூடாது.
வேள்வியில் மிஞ்சிய புலாலை உண்னலாம். ஓரிரவு கழிந்த பின்னரும் கூட அதை உண்ணலாம். எண்ணெய்ப் பதார்த்தங்களையும் அவ்வாறே உண்ணலாம்.
உண்ணற்க என்பனவற்றை உண்ணும் பிராமணன் இழிந்தவன். அறியாது உண்டால் சீர்ந்தபனம், சந்திராயனம் செய்திடுக. தடுக்கபட்ட மற்றேதேனும் உண்டால், ஒரு நாள் உண்ணாமல் இருந்தால் அப்பாவம் அகலும். அறியாதுண்ட பாவம் நீங்குவதற்கு ஆண்டு முழுவதும் ' பிரஜாபத்ய கிருக்சரம் ' சடங்கு அனுசரிக்க.
-- காவ்யா மநுதர்மம் என்ற நூலில் தமிழ்நாடன்.
-- இதழ் உதவி: P.சம்பத் ஐயர், திருநள்ளாறு.

No comments:
Post a Comment