பள்ளிகளில் இருந்து திரும்பும் குழந்தைகள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிய, புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறார், சூரப்பேட்டை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படிக்கும் அர்ஜுன்.
இவரது கண்டுபிடிப்பு, அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி. என்ற கல்வி நிறுவனம் நடத்திய சர்வதேசப் போட்டியில் ( MIT App Contest ) முதல் பரிசை வென்று இருக்கிறது. " பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வீட்டுக்கு வர தாமதமானால், இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் அவர்கள் எங்கே இருக்கிறார்கள், பேருந்து இன்னும் எவ்வளவு மணி நேரத்தில் வந்தடையும் என்பது போன்ற விஷயங்களை அறியலாம் " என்கிறார் அர்ஜுன்.
இந்தப் பஸ் லொக்கேட்டரை ( Ex School Bus Locator ) வடிவமைக்க ' கூகுள் ஆப்ஸ்'களில் ஒன்றான ' கூகுள் டிஸ்டன்ஸ் மேடன் க்யூ,ஆர் கோடு, விஷுவல் பேஸிக், ஜி.பி.ஆர்.எஸ்.' ஆகியவற்றைப் பயன்படுத்தினேன். பள்ளிப் பேருந்தில் பயணிக்கும் மாணவர்களின் ஐ.டி. கார்டில் க்யூ,ஆர். கோடு மூலம் அவர்களது தகவல்களைச் சேமித்துவைக்க வேண்டும். பேருந்து நடத்துனரிடம் ஆண்ட்ராய்ட் போன் இருக்க வேண்டும். பேருந்தில் மாணவர்கள் வீட்டுக்கு வரும்போது, அவர்களது க்யூ.,ஆர். கோடு அட்டையை நடத்துனர் ஸ்கேன் செய்வார். இது லாக் இன் ஆகும். பஸ் கிளம்பிய பிறகு, பெற்றோர்கள் தங்களது போனில் இருந்து WMC ( Where is My Child என்பதன் சுருக்கம் ) என்று டைப் செய்து நடத்துனரின் போனுக்கு அனுப்பினால், அவரது மொபைலில் இருந்து தானியங்கி முறையில் அந்த மாணவர் எங்கே இருக்கிறார், இன்னும் எவ்வளவு நேரத்தில் இறங்கும் இடத்துக்கு வந்துசேருவார் என்பது போன்ற தகவல்களை அனுப்பிவிடும். பெற்றோரிடம் ஆண்ட்ராய்ட் போன் இருந்தால், மேலே சொன்ன தகவல்களுடன் பேருந்து இருக்கும் இடத்தின் வரைபடமும் கிடைக்கும். என்கிறார் அர்ஜுன்.
-- கே.தீபிகா.. சுட்டி விகடன். 30-04-2013.
-- இதழ் உதவி : P.K. ஸ்ரீபாலா, பச்சூர் . காரைக்கால்.

No comments:
Post a Comment