ரத்த அழுத்தத்தை சமாளிக்க உதவும் யானைகள்.
மரபணுக்கள், உயரம், எடை ஆகிய அம்சங்கள்தான் ரத்த அழுத்தத்தை நிர்ணயம் செய்கின்றன. ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்பட்டால்தான், உயிரினங்களின் மிகவும் மென்மையான ரத்த நாளங்கள் வெடித்துவிடாமல் இருக்கும். யானைகளின் ரத்த அழுத்தம் மற்ற உயிரினங்களைவிட அதிகம். அதற்கு மேலே கூறப்பட்ட அம்சங்கள்தான் காரணம். யானைகளின் ரத்த நாளங்களும் முகப் பெரியவை. மனிதர்களைப் போலவே, ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் யானைகளும் கஷ்டப்படும். இந்தப் பிரச்சினையைத் தடுக்க, யானைகள் தங்கள் இதயத் துடிப்பைக் குறைத்துக்கொண்டு சமாளிக்கின்றன. அப்படி இல்லையென்றால் யானைகளால் சீராக இயங்க முடியாது. இதேபோல மனிதர்களும் இதயத் துடிப்பை சீராக வைத்துக்கொண்டால் நல்லது. குறிப்பிட்ட சில சுவாசப் பயிற்சிகள் மூலம் இதயத் துடிப்பு விகிதத்தை மனிதர்கள் சீராகப் பராமரிக்க முடியும்.
-- உயிர் மூச்சு பசுமையின் சுவாசம். சிறப்புப் பகுதி.
-- ' தி இந்து 'நாளிதழ். செவ்வாய். அக்டோபர் 8, 2013.

No comments:
Post a Comment