Saturday, April 12, 2014

பங்குனி உத்திரம்.

     ( சிறப்பு )
     இன்று ( 12- 4- 2014 )  பங்குனி உத்திரம்.  பங்குனி உத்திரத்தன்று 1. முருகன் தெய்வானை,  2. மீனாட்சி சுந்தரேஸ்வரர்,  3. ஸ்ரீராமர் சீதை,  4. ஆண்டாள் ஸ்ரீரங்கமன்னார்,  5. சாவித்திரி சத்யவான்,  6. மயிலை கற்பகாம்பாள் கபாலீவரர் போன்ற தெய்வ திருமணங்கள் நடந்தது.  அர்ஜுனன் பிறந்த நாள்.  ஸ்ரீதர்ம சாஸ்தா அவதரித்த நாள், ஹாஹா, ஹீஹீ என்ற இரு கந்தர்வர்கள் ஸ்ரீசாஸ்தாவிற்கு கட்டியம் கூறும்போது, "உத்தர நக்ஷத்ர ஜாதன், சித்ரமோஹன ரூபன், அகஸ்த்ய முனிபூஜிதன், ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரனம் ஐயப்பா" என்று கூறியதாக உள்ளது.
    சிவபெருமான் மன்மதனை தனது நெற்றிக் கண்ணினால் எரித்து விட்டார்.  மன்மதனின் மனைவியான ரதிதேவி இறந்த மன்மதனை உயிர்ப்பிக்குமாறு வேண்டினாள்.  இப்படி இறந்த மன்மதனை பார்வதிதேவி ஸ்ரீசிவனின் அனுமதியுடன் உயிர் எழச் செய்த நாள் பங்குனி உத்திரம்.  பரம்பொருள் ஒன்றுதான், இந்த பரம்பொருள் விநாயகர், சிவன், விஷ்ணு, மாரியம்மன், ஐயனார் போன்ற பல உருவங்களாகத் தோன்றி நமக்கு நன்மை செய்கின்றன.
    எந்த தெய்வத்தை வணங்கினாலும் பரம்பொருள் அந்த தெய்வத்தின் வடிவில் வந்து நமக்கு அருள்புரிவார்.  இதனை கீதையில், "யோ யோ யாம் யாம் தனும், பக்த ச்ரத்தயா அர்ச்சிலும் இச்சதி தஸ்ய தஸ்ய அசலாம் ச்ரத்தாம் தாமேவ விததாமி அஹம்" என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.  இதன் மூலம் எவர் எவர் எனது சரீர பூதமான எந்தெந்த தேவதையை சிரத்தையுடன் பூஜிக்க விரும்புகிறானோ, அவரவருடைய தேவதர்ச்சனா விஷயமான அந்த சிரமத்தையே நான் நிலை நிறுத்துகிறேன்.
-- எஸ்.குஞ்சிதபாதம், திருச்சி -1.
-- தினமலர்.  12-4-2014.   

No comments: