பைக்கில் வேகமாக போய்க்கொண்டிருந்தான் ராதாகிருஷ்ணன். சிக்னல் ஒன்றை கடந்து சென்றபோது, டிராஃபிக் போலீஸ்காரர் நடுரோட்டில் நின்றபடி வண்டியை நிறுத்தச் சொல்லி, சைகை காட்டினார்.
காலையிலேயே அம்மா சொல்லி அனுப்பியிருந்தாள், ' வேகமா ஓட்டாதேடா...' என்று.
' ஹெல்மெட்டை போட்டுட்டுதான் போயேண்டா..'. என்று அப்பா வருத்தப்பட்டதும் நினைவுக்கு வந்தது...
அவசரமாக வந்ததில் பர்ஸில் பணமும் இல்லை. பத்து ரூபாய் இருக்கல்லாம். அவ்வளவுதான்...
இப்படி பல சிந்தனைகள் மின்னலாக வந்து மறைய, போலீஸ் அருகே வண்டியை நிறுத்தினான் ராதாகிருஷ்ணன்.
போலீஸ்காரர் கேட்டார்.
" சிக்னல் தாண்டி கொஞ்சம் ட்ராப் பண்ணிடறீங்களா தம்பி ? "
-- சிவகாசி சுரேஷ். ரிலாக்ஸ்.
-- ' தி இந்து ' நாளிதழ். திங்கள். அக்டோபர் 7, 2013.

No comments:
Post a Comment