Tuesday, April 22, 2014

விடை தேடும் பயணம்.

*  ஜெயகாந்தன் எழுதிய எந்த நூலுக்காக அவருக்கு ' ஞானபீட விருது ' வழங்கப்பட்டது?
   குறிப்பிடத்தக்க இலக்கிய பங்களிப்பு செய்ததற்காக இது வழங்கப்பட்டது.  எனவே, ஒரு குறிப்பிட்ட நூலுக்காக என்று, இந்த விருது வழங்கப்படவில்லை.
*  தமிழ் இயக்கியங்களில் ஆடகம் என்று குறிப்பிடப்படுவது எது?
   ஆடகம் என்பது பசும்பொன்.  அதாவது 24 காரட் தங்கம் எனலாம். அரண்மனை யானைகளைக் கட்டிவைக்கும் மைதானத்தைத் தமுக்கம் என்பர்.
*  ஜவகர்லால் நேருவின் தாயார் பெயர் என்ன?
   நேருவின் அம்மாவின் பெயர் சொரூபராணி.  மகாத்மா காந்தியின் அம்மா புத்லீபாய்.  நேருவின் மனைவி பெயர் கமலா.
*  சமையல் அறையில் நாம் பயன்படுத்தும் சர்க்கரையின் அறிவியல் பெயர் என்ன?
   லாக்டோஸ் என்பது பாலில் காணப்படும் சர்க்கரை வடிவம்.  குளுக்கோஸ் என்பது தாவரங்களில் காணப்படும் சர்க்கரை வடிவம்.  இதை அருந்தினால்
   உடனடியாக ரத்தத்தில் கலந்து ஜீரணமாகிறது என்பதால், உடனடி சக்தி பெற இதைப் பயன்படுத்துகிறார்கள்.  மற்றபடி நாம் சமையல் அறையில்
   பயன்படுத்தும் சின்ன சின்னப் படிகங்களாக அமைந்த சர்க்கரை சுக்ரோஸ்தான்.
*  திரிசடை என்பவள் யார்?
   ராவணனின் தம்பி விபீஷணனுக்கும், ஷரமாவுக்கும் பிறந்தவள் திரிசடை.  அஸோகவனத்தில் சீதைக்கு ஆறுதல் கூறியவள் இவள்.
*  ராஜ்புத், ராணா, ரஞ்சித், ரன்வீர் -- யார் அல்லது என்ன?
   இவையெல்லாமே ராஜபுதன மன்னர் குலப் பெயர்கள்தான்.  வீரத்துக்குப் பெயர் போன இவர்களின் பெயர்கள் இந்திய கடற்படையிலுள்ள போர்க்
   கப்பல்களுக்கு பெயராக வைக்கப்பட்டுள்ளன.
* ' எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் '  -- இது எந்த நூலில் இடம் பெற்றது?
    ' எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் '  என்பது கொன்றைவேந்தன் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
-- ஜி.எஸ்.எஸ். வெற்றிக்கொடி. சிறப்புப்பகுதி.
--  ' தி இந்து '  நாளிதழ் . திங்கள். அக்டோபர் 7, 2013.

No comments: