மவுன விரதம் இருப்பது மிகவும் விசேஷமான வழிபாட்டு முறை. இது உடம்புக்கு ஆரோக்கியம் தரும் உபாயமும்கூட. எந்தக் கிழமையில் மவுன விரதம் இருப்பதாக நேர்ந்து கொள்கிறோமோ, அன்று சூரியனின் உதயம் முதல் பேசாமல் இருக்க வேண்டும். மவுன விரதத்தில் காஷ்ட மௌனம் என்பது மிகவும் சிரமமானது. சைகைகூடக் காட்டாமல், எழுதிக்காட்டாமல் மவுன விரதம் இருப்பது காஷ்டமம். அன்று முற்றிலும் பேசாமல் இருப்பதோடு, அளவாக உணவு உட்கொள்ள வேண்டும். பால், பழம் முதலியவற்றை மட்டும் சாப்பிடுவதும், சமைத்ததை உண்ணாமல் இருப்பதும் மிகவும் விசேஷம்.
தலையை கட்டாதீங்க.
வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் தலை முழுகி, அந்தத் துண்டுடன் பூஜா காரியங்களைச் செய்வதுண்டு. பூஜை செய்யும்போது தலையில் வஸ்திரம் இருக்கக்கூடாது. தலையைத் துணீயால் கட்டிக்கொண்டு பூஜைகள் செய்வது வடநாட்டு சம்பிரதாயம். தென்னக வழக்கப்படித் தலையில் துணி இருத்தல் கூடது.
--- தினமலர். பக்திமலர். அக்டோபர் 10, 2013.

No comments:
Post a Comment