டி.வி, ஏ.சி. போன்றவற்றுக்கு உபயோகிக்கும் ரிமோட், கை பட்டுப்பட்டு சீக்கிரம் அழுக்காகிவிடும். வினிகரில் காட்டன் பட்ஸை சிறிது நனைத்து, மெதுவாக ரிமோட்டை துடைத்தால் ... பளிச் பளீச்தான் ! சுவிட்சையும்கூட இதே முறையில் துடைக்கலாம்... மின்சாரத்தை துண்டித்துவிட்டு !
* பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா, இஞ்சி போன்ற பொருட்களை, ஈரமில்லாத பிரெட் பாக்கெட் கவர்களில் வைத்து, உச்சியில் முடிச்சு போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால்... 10 நாட்கள் வரை ஃபிரெஷ்ஷாக இருக்கும்.
* உங்கள் கைக்குட்டை , பவுடர் தடவாமலே எப்போதும் வாசனையாக இருக்க வேண்டுமா? குளியல் சோப்பை கவரில் இருந்து எடுத்த பிறகு, அந்தக் கவரின் உள்ளே உங்கள் கைக்குட்டைகளை மடித்து வையுங்கள். உபயோகிக்கும்போது வாசனையாக இருக்கும். உங்கள் கைக்குட்டை உறையில் உள்ள வாசனை போகும் வரை அதைப் பயன்படுத்தலாம்.
* வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவை நறுக்கிய பிறகு கறுக்காமல் இருக்க, மோரில் போடுவது வழக்கம். மோர் கிடைக்காவிட்டால், எலுமிச்சை சாறு பிழிந்த தண்ணீரில் போடுங்கள். அப்போதும் நிறம் கறுக்காமல் இருக்கும்.
* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, மாவின் மீது வெந்தீர் அல்லது சூடான பாலைப் பரவலாக ஊற்றி, அப்படியே ஐந்து நிமிடங்கள் வைத்து விடுங்கள்.
அதன் பிறகு மாவை முள்கரண்டியால் கிளறி, பின்பு பிசைந்து சப்பாத்தி சுட்டால்... மிகவும் மிருதுவாக இருக்கும்.
-- அவள் விகடன். 30-08-2011.

No comments:
Post a Comment