" மௌனம் என்பது வேறு; அமைதி என்பது வேறா?"
" ஜான்கேஜ் என்பவர் ' மௌனம் ' என்ற புத்தகத்தில் எழுதுகிறார் --
எந்த சப்தமும் வராத ஓர் அறையை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கினார்கள். கேஜ் நுழைந்தபோது இரண்டு சப்தங்களைக் கேட்டார். ' என்ன சப்தம்?' என்று கேட்டபோது, 'ஒன்று, மனம் ( MIND ) வேலைசெய்கின்ற சப்தம்.- நரம்பு மண்டலம். இரண்டாவது, ரத்த ஓட்டம், இயங்குகின்ற சப்தம். இதுநாள் வரை நான் இந்தச் சப்தங்களைக் கேட்டதே இல்லை ' என்று கேஜ் சொன்னார். ' ஆம், அமைதி வேறு மௌனம் வேறு. அமைதி எங்கு வேண்டுமானாலும் இருக்கும். போருக்குப் பிறகுகூட அமைதி இருக்கலாம். புயலுக்குப் பிறகுகூட அமைதி இருக்கலாம். அமைதி மேலோட்டமானது.... மௌனம் உள் மையத்தில் இருந்து ஏற்படுவது. மூன்று துறவிகள் மௌனம் அனுஷ்டிப்பது என்று தீர்மானித்தார்கள். ஐந்து நிமிடம் சென்றிருக்கும் முதல் துறவியின் முகத்தில் கரி இருந்ததைப் பார்த்தார், இரண்டாவது துறவி. அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
'உங்கள் முகத்தில் கரி !' என்றார்.
முதலாவது துறவி, ' நீ பேசிவிட்டாய் ' என்றார். மூன்றாம் துறவி, ' நான் மட்டும்தான் பேசவில்லை' என்றார்.
மௌனம் வார்த்தைகளைக் கடந்தது. மொழிகளைக் கடந்தது மட்டுமல்ல; எண்ணங்களையும் கடந்தது."
-- சந்திரா சிவபாலன், திருச்சி, 26. ( நானே கேள்வி...நானே பதில்! )
-- ஆனந்தவிகடன். 16 - 5 - 2012.

No comments:
Post a Comment