உலகில் எல்லா நாடுகளிலும் வருடப் பிறப்பு கொண்டாடப்படுகிறது. ஆனால் அந்த நாடுகளின் வருடங்கள் எல்லாவற்றுக்கும் பெயர் என்ற ஒன்று இருக்காது. பெரும்பாலான நாடுகளின் ஆண்டுகள் எண்களின் அடிப்படையில் தான் அறியப்படுகிறது. ஆனால் தமிழர் கொண்டாடும் ஆண்டுகளுக்கு மட்டுமே பெயர் இருக்கிறது. ( அது வடமொழியில் இருந்தாலும் கூட ) தமிழில் மட்டுமே ஆண்டுகளுக்கு பெயர்கள் வழங்கப்படுகின்றன.
தமிழில் மொத்தம் அறுபது ஆண்டுகள் உண்டு. சூரியன் மேஷ ராசியில் நுழைவதை தமிழ் வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு பிறக்கும் தமிழ் ஆண்டானது தமிழ் ஆண்டுகளின் வரிசையில் இருபத்து ஒன்பதாவது ஆண்டு ஆகும். இப்புத்தாண்டின் பெயர் 'மன்மத' வருடம். மன்மத என்றால் வடமொழியில் இளமை என்று பொருள். இது கலி பிறந்து 5116வது வருடமாகும். தமிழில் அறுபது வருடங்கள் பட்டியலை வாக்கிய பஞ்சாங்கம் அல்லது திருக்கணித பஞ்சாங்கத்தில் காணலாம். ஒவ்வொரு தமிழ் வருடத்திற்கும் இடைப்காட்டுச் சித்தர் எழுதிய பாடல்களைக் கொண்டு அந்த வருடத்தின் பலன் அறியப்படுகிறது.
சனி கிரகம் சூரியனை ஒரு முறை சுற்ற 30 வருடங்களை எடுத்துக் கொள்கிறது. வியாழன் கிரகம், சூரியனை ஒருமுறை சுற்ற 12 வருடங்களை எடுத்துக் கொள்கிறது. இந்த இரு கிரகங்களும் 60 வருடங்களுக்கு ஒருமுறைதான் ஒரே நிலையில் சந்திக்கும். இதைக் கொண்டுதான் தமிழ் வருடங்களை 60 என்று கணக்கிட்டார்கள். முதல் வருடத்தின் பெயர் 'பிரபவ' என்பதாகும். எந்த தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் இதை எல்லாம் கணித்த நம் முன்னோர்கள் பற்றி தமிழ் வருடப் பிறப்பு கொண்டாட்டத்தில் நினைத்து பார்த்து மகிழ்வோம். எல்லோருக்கும் இதை பகிர்வோம்.
-- ஸ்ரீ, தலையங்கம். பே.மு.பே
-- தினமலர் திருச்சி பெண்கள்மலர். 11-4-2015.

No comments:
Post a Comment