நூல்களும் நூலகங்களும்தான் அறிவை வளர்ப்பதற்கு பயன்படும் அறிவுச் சோலைகள்.
ஜூலியஸ் சீசர் எகிப்தின் மிது படையெடுத்து அந்நாட்டை அடிமைப்படுத்தச் சென்றபோது எகிப்தில் அமைந்திருந்த மிகப்பெரும் நூலகத்தை அவரது படையினர் தீயிட்டு அழித்தனர்.
பேரழகி கிளியோபாட்ராவிடம் சீசர் மயங்கி அவளிடமே அவளது நாட்டை ஒப்படைத்தார். அவள் அழகில் சொக்கிப்போயிருந்த அவர் அவளுடனேயே தங்கிவிட்டார்.
ஒருநாள் சீசரை கிளியோபாட்ரா அழைத்து, " உமக்கு நான் ஒரு பெரும் தண்டனை வழங்க இருக்கிறேன். என்னுடன் சேர்ந்து வாழ்வதால் உம்மை மன்னிப்பதாக இல்லை. உம்முடைய படைவீரர்கள் பிடித்த கட்டடங்களை திருப்பிக் கட்டிவிடலாம். கொல்லப்பட்ட வீரர்களைப் பற்றிக்கூட அது போரில் நடக்கக்கூடியதே என விட்டுவிடலாம். ஆனால், அறிவுப்பெட்டகமாக விளங்கிய அரிய நூலகத்தை உம்முடைய முரட்டு வீரர்கள் எரித்து விட்டார்களே! ஆயிரமாண்டுச் சிந்தனைகளை இனி மீண்டும் எப்படி பெறுவது? எனவே, இந்த நாட்டின் அரசி என்ற முறையில் உம்மை எரிக்கலாமா? என்று நினைக்கிறேன்" என்று கடிந்தாளாம். சீசர் எரிக்கப்படவில்லை. சமரசமாகி விட்டது. இந்நிகழ்ச்சியை சுட்டிக்காட்டுவது நூல்களின் அவசியத்தை வலியுறுத்தத்தான்!
-- தா.பாண்டியன் எழுதிய ' மாணவர் மாணவியர்களுக்காக ' என்ற நூலில் இருந்து...
-- தினமலர். வாரமலர் . நவம்பர் . 18, 2012.

No comments:
Post a Comment